டி-20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைப்பு; ஐபிஎல்.,க்கு வழி பிறந்தது| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டி-20 உலக கோப்பை தொடர் ஒத்தி வைப்பு; ஐபிஎல்.,க்கு வழி பிறந்தது

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020
Share

மும்பை : ஆஸ்திரேலியாவில் அக்., மாதம் நடக்கவிருந்த 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து ஐபிஎல் கிரக்கெட் போட்டிகளை நடத்த வழி பிறந்துள்ளது.



latest tamil news



சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் 'டுவென்டி-20' உலக கோப்பை வரும் அக்., 18-நவ. 15ல் ஆஸ்திரேலிய மண்ணில் நடத்தப்பட உள்ளது. ஆனால் கொரோன பரவல் காரணமாக 16 அணிகளை ஒன்றிணைத்து உலக கோப்பை தொடர் நடத்துவது என்பது இயலாத காரியம் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு கைவிரித்து வருகிறது. இதனால் உலக கோப்பை தொடர் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்பட்டது .ஆனால் ஐ.சி.சி., இறுதி முடிவை அறிவிக்காமல் கடந்த இரண்டு மாதங்களாக இழுத்தடித்து வந்தது.

இந்நிலையில், இன்று ஐ.சி.சி.,கூட்டம் காணொலி வாயிலாக நடந்தது. இதில் உலக கோப்பை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில் டி-20 உலக கோப்பையை ஒத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2021 முதல் 2023 வரை அடுத்த 3 ஆண்டுளுக்கான டி-20 உலக கோப்பை நடைபெறும் தேதியையும் அறிவித்துள்ளது.

* 2021ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., - நவ., 2021, பைனல் - நவ.,14, 2021

* 2022ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., - நவ., 2022, பைனல் - நவ.,13, 2022

* 2023ம் ஆண்டு டி-20 தொடர்: அக்., - நவ., 2023, பைனல் - நவ.,16, 2023


latest tamil news




யுஏஇ.,யில் ஐபிஎல்:


டி-20 உலக கோப்பை ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து, அந்த இடைவெளியில் ஒத்திவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல்.,, தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த பி.சி.சி.ஐ., நடவடிக்கை எடுக்கும் என தெரிகிறது. இதற்குத் தயாராகும் வகையில் ஏற்கனவே சொந்தமண்ணில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், 'டுவென்டி-20' தொடர், நியூசிலாந்து 'ஏ' அணியின் இந்திய பயணங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X