கோரேகான் வழக்கு: வரவர ராவ் மருத்துவ அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Bhima Koregaon violence accused கோரேகான் வழக்கு:  வரவர ராவ் மருத்துவ அறிக்கை,ஐகோர்ட்activist Varavara Rao tests positive for coronavirus

கோல்ஹாப்பூர்: பீமா கோரேகான் கலவர வழக்கில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான வர வர ராவ் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம், புனே அருகே பீமா கோரேகான் என்ற இடத்தில் 2017 டிசம்பரில் இரு தரப்பினரிடையே கலவரம் குறித்து விசாரணை நடத்திய புனே போலீசார் கலவரத்திற்கு காரணமான எல்கர் பரிஷத் மாநாட்டில் பேசியது, கலவரத்திற்கு நிதியுதவி செய்தது மற்றும் நக்சல்ளுடன் தொடர்பு வைத்துள்ளது என சமூக ஏற்பட்டாளர் வர வர ராவ், உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். நவி மும்பையில் உள்ள தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தேசிய புலனாய்வு பிரிவு(என்.ஐ.ஏ.,) விசாரணைக்கு மாற்றப்பட்டது.


latest tamil news




இந்நிலையில் முக்கிய குற்றவாளியான 80 வயது வரவர ராவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு கடந்த ஞாயிறன்று மும்பை ஜெ.ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் நானாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வரவர ராவினை சந்திக்க குடும்பத்தினர் விரும்பினால் பரிசீலிக்க வேண்டும். அவரது தற்போதைய உடல் நிலை குறித்து மருத்துவ அறிக்கையினை தாக்கல் செய்ய தேசிய புலனாய்வு ஏஜென்சிக்கு மும்பை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஜூலை-202022:27:50 IST Report Abuse
தல புராணம் கோரேகான் கொலைகாரன் வழக்கு..
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
20-ஜூலை-202021:22:53 IST Report Abuse
sundarsvpr கைதியை பார்க்க வருபவர்கள் நோய் பாதிப்பு இல்லாதவர் என்பதற்கு என்ன உத்திரவாதம்? காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிபதி அறிக்கை கேட்பது நியாயம். மருத்தவ மனை நோயாளியை பார்க்க அனுமதிக்கவில்லையெனின் நீதிமன்றம் தலையிடுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X