பொது செய்தி

இந்தியா

கேரளாவில் புதிதாக 794 பேருக்கு கொரோனா

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

இந்த செய்தியை கேட்க

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 794 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13,274 ஆக உயர்ந்தது. மேலும் இருவர் கொரோனாவுக்கு பலியானதைத் தொடர்ந்து மொத்த பலி எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.



latest tamil news



புதிதாக பாதிப்பு அடைந்தவர்களில் 148 பேர் வெளிநாடுகளில் இருந்தும் 105 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்துள்ளார்கள். இன்று புதிதாக தொற்று ஏற்பட்ட 24 பேர்களுக்கு கொரோனா யார் மூலம் பரவியது என்று கண்டுபிடிக்க முடியவில்லை.

அதிக பட்சமாக திருவனந்தபுரம் மாவட்டத்தில் 182 பேருக்கும், கோழிக்கோடு மாவட்டத்தில் 82 பேருக்கும், கொல்லம் மாவட்டத்தில் 79 பேருக்கும், எர்ணாகுளம் மாவட்டத்தில் 72 பேருக்கும், ஆலப்புழா மாவட்டத்தில் 53 பேருக்கும், மலப்புரம் மாவட்டத்தில் 50 பேருக்கும், பாலக்காடு மாவட்டத்தில் 48 பேருக்கும், கோட்டயத்தில் 46 பேருக்கும், திருச்சூர் மாவட்டத்தில் 42 பேருக்கும், காசர்கோடு மாவட்டத்தில் 28 பேருக்கும், வயநாடு மாவட்டத்தில் 26 பேருக்கும், இடுக்கி மாவட்டத்தில் 24 பேருக்கும், மற்றும் பத்தனம்திட்டாவில் 3 பேருக்கும் கொரோனா உறுதியானது.


latest tamil news



கேரளாவில் தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7,611 ஆக உயர்ந்துள்ளது. அங்கு இதுவரை 5,618 பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 14,640 ரத்தமாதிரிகள் சேர்க்கப்பட்டன.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
21-ஜூலை-202016:42:26 IST Report Abuse
s.rajagopalan கேரளாவில் இந்த மிக நன்றாக கட்டுப்படுத்தப்பட்டது பெருமையாக இருந்தது. ...பிறகு அது மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ...ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல தயக்கம்...இந்த தேர்தல் கொரோனாவை விட தொல்லையா இருக்கே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X