பொது செய்தி

இந்தியா

ஜூலை 29-ல் இந்தியா வருகிறது 5 ரபேல் போர் விமானங்கள்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
First batch, Rafale jets, India, July 29,
ஜூலை 29, இந்தியா, ரபேல், போர் விமானங்கள்

புதுடில்லி: ஜூலை 29-ம் தேதி 5 ரபேல் விமானங்கள் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரான்ஸ் நாட்டின் டாசல்ட் நிறுவனத்திடமிருந்து ரூ 59 ஆயிரம் கோடியில் 36 நவீன ரக ரபேல் போர் விமானங்கள் வாங்க 2016-ல் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. இந்த ஒப்பந்த விவகாரம் அரசியல் ரீதியாக பெரும் புயலை கிளப்பி வந்தது. இந்நிலையில் முதல்கட்டமாக 5 ரபேல் போர் விமானங்கள் வரும் ஜூலை 29-ல் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



latest tamil news



அரியானாவின் அம்பாலா விமானப்படைதளத்தில் வந்திறங்க உள்ளதாகவும், பின்னர் ஆக.20ல் நடக்க உள்ள விழாவில் முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக லடாக் எல்லையில் சீனாவின் அட்டூழியத்தை ஒழிக்க ரபேல் ரக போர்விமானங்கள் பயன்படுத்திட இந்தியா திட்டமிட்டுள்ள நிலையில் அதி நவீன போர் விமானமான ரபேல் விமானங்கள் ஜூலை 29-ல் இந்தியா வரவுள்ளது இந்தியாவின் விமானப்படைக்கு வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chowkidar Modikumar - Auckland CBD,நியூ சிலாந்து
21-ஜூலை-202008:26:55 IST Report Abuse
Chowkidar Modikumar நிச்சயமா முதல 5 ரபேல் வெச்சி விரைவில் POK / COK ல penetration டெஸ்ட் இருக்கு.
Rate this:
Cancel
21-ஜூலை-202007:21:42 IST Report Abuse
ஆப்பு வாங்க... விமானங்களை பயன்படுத்தி சீன கொரோனாவை சுட்டுப் பொசுக்குங்க. ஜெய் ஹிந்த்.
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
21-ஜூலை-202005:42:14 IST Report Abuse
மணி ஏம்பா நாலு அஞ்சு பீஸ் வாங்கி என்ன பண்ண போறீங்க? இருப்பதோ ஆயிரக்கணக்கான மைல் எல்லை யானைபசிக்கு சோளப்பொரி கதைதான். வல்லரசாகவேண்டுமென்ற ஆசையிருந்தால் வான்படையை பலப்படுத்தாமல் அது நடக்காது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X