பொது செய்தி

தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானம்: இறுதி கட்ட கான்கிரீட் பணி தீவிரம்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
 ஜெயலலிதா நினைவிடம் கட்டுமானம்: இறுதி கட்ட கான்கிரீட் பணி தீவிரம்

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில், 'பீனிக்ஸ்' பறவை கட்டடத்திற்கு, இறுதிக்கட்ட கான்கிரீட் போடும் பணியை, பொதுப்பணி துறை துவக்கியுள்ளது.

ஜெயலலிதாவிற்கு, மெரினா கடற்கரையில் நினைவிடம் கட்டும் பணி, 50.8 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது.கட்டுமான பணி தீவிரம்கட்டுமான பணிகளை ஜூலை இறுதிக்குள் முடிக்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.ஊரடங்கிலும், சிறப்பு அனுமதி பெறப்பட்டு, மூன்று மாதங்களாக கட்டுமான பணி தீவிரமாக நடந்து வருகிறது.ஜெ., உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில், முழுதும் கான்கிரீட் பயன்படுத்தி, பீனிக்ஸ் பறவை வடிவ கட்டடம் கட்டப்படுகிறது.

இதற்காக, துபாயில் இருந்து கட்டுமான சாதனங்கள் எடுத்து வரப்பட்டு உள்ளன. இந்த கட்டடத்திற்கு இறுதிக்கட்டமாக கான்கிரீட் போடும் பணி நேற்று காலை துவங்கியது. இந்த பணிக்காக, ஆந்திராவில் இருந்து, சில நாட்களுக்கு முன் சிறப்பு அனுமதியுடன், 50 தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அவர்களோடு, ஜார்க்கண்ட் தொழிலாளர்களும் உள்ளனர். அதிகாரிகள் நம்பிக்கைபொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராஜாமோகன், கண்காணிப்பு பொறியாளர் ஆயிரத்தரசு ராஜசேகரன் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பொதுப்பணித்துறை பொறியாளர்கள், அங்கேயே முகாமிட்டு, பணிகளை கண்காணித்து வருகின்றனர்.

சென்னை, ஐ.ஐ.டி., வல்லுனர்களும் பணிகளை கண்காணித்து வருகின்றனர். இக்குழு பரிந்துரைப்படி, கட்டுமானத்திற்கு அதிநவீன கான்கிரீட் கலவை பயன்படுத்தப்படுகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலையில் இருந்து, அவற்றை விடிய விடிய எடுத்து வர, சென்னை போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர். இப்பணிகள் இன்று காலை முடிந்து விடும் என, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுள்ள, வெளிமாநில தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், பொதுப்பணி துறை அதிகாரிகள் ஏற்பாட்டில், நேற்று மதிய உணவாக சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் வறுவல் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202004:03:39 IST Report Abuse
தல புராணம் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டுள்ள, வெளிமாநில தொழிலாளர்களுக்கு சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் வறுவல் வழங்கப்பட்டது. அம்மாவுக்கு பிடிச்ச ....கறி போடல்லியா?
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
22-ஜூலை-202003:59:46 IST Report Abuse
தல புராணம் ஏ-1
Rate this:
Cancel
Rajesh - Chennai,இந்தியா
22-ஜூலை-202001:01:18 IST Report Abuse
Rajesh A1
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X