பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கேபிள், 'டிவி' இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

சென்னை : அரசு கேபிள், 'டிவி' இணைப்பு வழங்க, அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக, புகார் எழுந்துள்ளது.

தமிழ்நாடு அரசு கேபிள், 'டிவி'க்கு, 30 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 20 ஆயிரம் ஆப்பரேட்டர்கள், சேவை வழங்குகின்றனர். அரசு கேபிள், 'டிவி'யில், 'செட் - டாப் பாக்ஸ்' இலவசமாக வழங்கப்படுகிறது. எனவே, அரசு கேபிள், 'டிவி' இணைப்பு பெற, பொது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இணைப்பு வழங்க, 1,000 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இது குறித்து, வாடிக்கையாளர்கள் கூறியதாவது: சென்னை கொளத்துார் பகுதியில், அரசு கேபிள், 'டிவி' புதிய இணைப்பு வழங்க, 1,400 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மாதக் கட்டணம், ஜி.எஸ்.டி.,யுடன், 165 ரூபாய் வசூலிப்பதற்கு பதிலாக, இணைப்பு கட்டணம் தவிர்த்து, 250 ரூபாய் தனியாக வசூலிக்கின்றனர்.இதேபோல, சென்னையின் பல பகுதிகள் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும், அரசு கேபிள், 'டிவி' இணைப்பு வழங்க, அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது போன்ற கட்டண கொள்ளையை தடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

அரசு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் கூறியதாவது: அரசு கேபிள், 'டிவி'யில், செட் - டாப் பாக்ஸ் பெற, நாங்கள் கட்டணம் செலுத்துகிறோம். அந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களிடம் வசூலிப்போம். மேலும், வீடுகளுக்கு இணைப்பு வழங்க, ஒயர்களுக்கான செலவையும் வசூலிப்போம்.இதற்காக, அதிகபட்சம்,600 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கிறோம். இந்த கட்டணம், கிராமப் புறங்கள் மற்றும் நகரங்களில் மாறுபடும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-ஜூலை-202020:09:19 IST Report Abuse
RajanRajan இங்கு யார் சொல்வது உண்மை? அரசா கேபிள் டிவி ஆபரேட்டர் சொல்வதா. அல்லது இருவருமே கூட்டு கள்ளன்மார்களா.ஆப்பரேட்டர்கள் ஏன் சேவைகளுக்கான கட்டணத்தை ஜீ எஸ் டீ பில் கொடுத்து பணம் பெறக்கூடாது. அத்தனை செட் டாப் பாக்ஸ் ம் விற்று தான் இவனுங்க காசு பார்த்துள்ளங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X