பொது செய்தி

இந்தியா

சீனாவுக்கு இந்தியா 'செக்': அமெரிக்காவுடன் போர் பயிற்சி

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
Indian Navy, US Navy, Andaman, drills, China

புதுடில்லி : சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து, நம் கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதற்காக, அமெரிக்காவின் மிகப் பெரிய, விமானம் தாங்கிய போர்க் கப்பல், அந்தமானுக்கு வந்துள்ளது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்துள்ளது. எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து பல கட்டங்களாக பேசப்பட்டது. அதில், படைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், களத்தில், இதற்கு நேர்மாறாக சீன ராணுவம் நடந்து கொள்கிறது.

எல்லைப் பிரச்னை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சீனாவுக்கு எதிராக, சர்வதேச அளவில் பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. தென் சீனக் கடலின், 90 சதவீதப் பகுதிகளுக்கு, சீனா உரிமை கோரி வருகிறது. இதுவும் சர்வதேச பிரச்னையாக உள்ளது.

அமெரிக்கா இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிமிதிஸ், ரொனால்டு ரீகன் ஆகிய இரண்டு போர்க் கப்பல்களை, தென் சீனக் கடல் பகுதிக்கு அனுப்பியது. அங்கு, அந்த கப்பல்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டன. அதைத் தொடர்ந்து, நம் அரசின் கோரிக்கையை ஏற்று, போர் பயிற்சியில் ஈடுபடுவதற்காக, யு.எஸ்.எஸ்., நிமிதிஸ் என்ற விமானம் தாங்கிய போர்க் கப்பலை அனுப்புவதாக, அமெரிக்கா கூறியிருந்தது.

அதன்படி, அந்தமான் - நிகோபார் தீவுகளுக்கு அருகில், இந்தியப் பெருங்கடலுக்குள், 1 லட்சம் டன் எடையுள்ள இந்த பிரமாண்ட போர்க் கப்பல் வந்துள்ளது. அடுத்து வரும் நாட்களில், அமெரிக்க - இந்திய கடற்படை வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இதற்காக, நம் கடற்படையின் முக்கிய போர்க் கப்பல்களும், நீர்மூழ்கி கப்பல்களும், அந்தமானுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சீனாவுடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து வரும் நிலையில், அதை எச்சரிக்கும் வகையில், இந்த போர் பயிற்சி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sampath Kumar - chennai,இந்தியா
22-ஜூலை-202008:30:10 IST Report Abuse
Sampath Kumar சும்மா பீலா காட்டின் போதும் சீனா கரண் அவன் நாட்டின் பிரச்சனையை சமாளிக்க முடியாது அளவிற்கு இயற்கை தண்டனை கொடுத்து கொண்டு உள்ளது நீங்க இங்க வேற காரியத்தை பார்ப்பது நல்லது
Rate this:
Cancel
Madhav - Chennai,இந்தியா
21-ஜூலை-202021:30:31 IST Report Abuse
Madhav //அதில், படைகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டது. ஆனால், களத்தில், இதற்கு நேர்மாறாக சீன ராணுவம் நடந்து கொள்கிறது.// நாம் அவர்களை அடித்து விரட்டி விட்டோம் பாண்டு, ஜேம்சு பாண்டு என்றெல்லாம் கதைகள் வந்ததே எல்லாம் பொய்யா கோபால் பொய்யா
Rate this:
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜூலை-202020:54:43 IST Report Abuse
Tamilan பண முதலைகள் கொழுக்க மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X