ஆந்திராவில் திருமணம் நடத்த வட்டாட்சியர் அனுமதி கட்டாயம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆந்திராவில் திருமணம் நடத்த வட்டாட்சியர் அனுமதி கட்டாயம்

Added : ஜூலை 20, 2020
Share

திருப்பதி : -'ஆந்திராவில் திருமணங்கள் நடத்த, வட்டாட்சியர் அனுமதி, கட்டாயம் பெற வேண்டும்' என, ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நாடு முழுதும் கொரோனா பரவல் பெருகி வருகிறது. இதையடுத்து, கேளிக்கை விடுதிகள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் என, மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதேபோல, திருமணம், இறப்பு போன்ற முக்கிய நிகழ்வுகளும், குறைவான உறவினர்களுடன் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.ஆந்திராவில், கொரோனா பரவல் அதிகரித்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 49 ஆயிரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று முதல், மாநிலத்தில் சிராவண மாதம் துவங்க உள்ளது.

இந்த மாதத்தில், அதிக அளவில் திருமணங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதனால், மக்கள் அதிக அளவில் ஒரே இடத்தில் கூடி, தொற்று அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.எனவே, ஆந்திர அரசு, 'இனி யாரும் திருமணம் செய்ய வேண்டுமென்றால், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அனுமதியை பெற வேண்டும்' என, நேற்று முன்தினம் மாலை அரசாணை வெளியிட்டுஉள்ளது.'திருமணம் செய்து கொள்ளும் மணமகன், மணமகள் விபரங்கள், அவர்களுடன் திருமணத்தில் பங்கேற்கும், 20 உறவினர்களின் பெயர், ஆதார் எண், அவர்களின் கொரோனா பரிசோதனை முடிவுகள், திருமண அழைப்பிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்' என, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X