பொது செய்தி

தமிழ்நாடு

மின் வாரிய ஓய்வூதியதாரர் ஆயுள் சான்றுக்கு விலக்கு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : வைரஸ் பரவலால், ஓய்வூதியதாரர்கள், இந்த ஆண்டிற்கான ஆயுள் சான்று வழங்குவதில் இருந்து, மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது.

தமிழக மின் வாரியத்தில் பணிபுரிந்து, ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களும், உயிரிழந்த ஓய்வூதியதாரர்களின் குடும்பத்தினருக்கும், வாரியம் சார்பில், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதற்காக, ஓய்வூதியம் பெறுவோர், உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றை, ஏப்., மே, ஜூன் மாதங்களில், ஓய்வூதியம் பெறும் வங்கியில், நேரடியாக சென்று வழங்க வேண்டும். ஜூன் மாதத்திற்குள் வழங்கவில்லை எனில், ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்படும்.

பின், ஆயுள் சான்று வழங்கியதும், மீண்டும் ஓய்வூதியம் வழங்கப்படும். வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், ஓய்வூதியதாரர்கள், ஜூலை முதல் செப்., வரை, வங்கிகளில் ஆயுள் சான்றை வழங்க அவகாசம் வழங்கப்பட்டது. வழங்காதவர்களுக்கு, நவம்பர் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டது. தற்போது, ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டு வருவதால், முதியவர்கள், வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஓய்வூதியதாரர்கள், இந்த ஆண்டிற்கான ஆயுள் சான்று வழங்குவதில் இருந்து, மின் வாரியம் விலக்கு அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X