செவ்வாய்க்கு விண்கலம்: சாதித்தது யு.ஏ.இ.,

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

துபாய் : மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.

மற்ற கிரகங்களுக்கு விண்கலத்தை அனுப்பும் முதல் அரபு நாடு என்ற பெருமையை, யு.ஏ.இ., பெற்றுள்ளது.அரபு நாடுகளில் ஒன்றான, யு.ஏ.இ., இதுவரை, பூமியின் சுற்றுப் பாதைக்கு, ஒன்பது விண்கலங்களை அனுப்பியுள்ளது. அடுத்து வரும் ஆண்டுகளில், மேலும், எட்டு விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. மேலும், விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்துக்கு, யு.ஏ.இ.,யைச் சேர்ந்த விண்வெளி வீரர், கடந்தாண்டு, செப்.,ல் அனுப்பப்பட்டார்.

நம்பிக்கை தேடுதல் : தொடர்ந்து விண்வெளி ஆய்வில் ஈடுபட்டுள்ள, யு.ஏ.இ., செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக, 'அல் அமால்' எனப்படும், நம்பிக்கை தேடுதல் என்ற பெயரில், விண்கலத்தை அனுப்பியுள்ளது.இந்த விண்கலம், ஜப்பானில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து, ஜப்பானின், எச் - 2 - ஏ என்ற ராக்கெட் மூலம், நேற்று காலை அனுப்பப்பட்டுள்ளது. புறப்பட்ட ஒரு மணி நேரத்தில், திட்டமிட்டப்படி, ராக்கெட்டில் இருந்து, நம்பிக்கை விண்கலம் பிரிந்து சென்றது.இதை, ஜப்பான் விண்வெளி மையம் மற்றும் துபாயில் அமைந்துள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்த, யு.ஏ.இ., விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

கட்டித் தழுவியும், கரகோஷம் எழுப்பியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். சுற்றுப்பாதைமொத்தம், 1,497 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தின் கீழ், 1.3 டன் எடையுள்ள இந்த விண்கலத்தை, யு.ஏ.இ., விஞ்ஞானிகள் வடிவமைத்து உள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு பயணத்தை துவக்கியுள்ள இந்த விண்கலம், 49.5 கோடி கி.மீ., துாரம் பயணிக்க உள்ளது. அடுத்த, 200 நாட்களுக்கு இந்த விண்கலம் பயணித்து, 2021 பிப்.,ல் செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையை அடையும்.செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, அமெரிக்கா மற்றும் சீனாவும் இந்த ஆண்டில் விண்கலங்களை அனுப்ப திட்டமிட்டிருந்தன. தற்போது, யு.ஏ.இ., முந்திக் கொண்டுள்ளது.

இதற்கு முன் அனுப்பப்பட்ட விண்கலங்கள் எல்லாம், செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கி ஆய்வு செய்தன.ஆனால், நம்பிக்கை விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் பயணிக்கும்.செவ்வாய் கிரகம் தன்னைத் தானே சுற்றி வருவதற்காகும், 687 நாட்கள், இந்த விண்கலம் ஆய்வு மேற்கொள்ளும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X