பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில், 4,985 பேருக்கு பாதிப்பு செங்கை, காஞ்சி, திருவள்ளூரில் எகிறுது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில், எப்போதும் இல்லாத வகையில், 4,985 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. மாநிலம் முழுதும் இதுவரை, 1.75 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையை சுற்றி யுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இதுகுறித்து, சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழகத்தில், 112 கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன. அந்த ஆய்வகங்களில், நேற்று, 52 ஆயிரத்து, 87 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், எப்போதும் இல்லாத வகையில், 4,985 பேருக்கு பாதிப்பு உறுதியானது. சென்னையில், 1,298; செங்கல்பட்டில், ௩54; காஞ்சிபுரத்தில், 329 ; மதுரையில், 106 ; திருவள்ளூரில், 454 ; துாத்துக்குடியில், 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வரும் நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது.மார்ச் முதல் நேற்று வரை, 19.84 லட்சம் பேருக்கு நடத்திய, கொரோனா பரிசோதனையில், ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 678 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில், 87 ஆயிரத்து, 235 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டில், 10 ஆயிரத்து, 27; காஞ்சிபுரத்தில், 5,039; மதுரையில், 8,357 திருவள்ளூரில், 9,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று, 3,861 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து, ஒரு லட்சத்து, 21 ஆயிரத்து, 776 பேர் குணமடைந்துள்ளனர்.சில தினங்களில் இறந்தவர்களில், சென்னையில், 22 பேர் உட்பட, 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, சென்னையில், 1,456 பேர் உட்பட, 2,551 பேர் இறந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X