ஆப்கன், பாகிஸ்தானில் கர்ப்ப விகிதம் அதிகரிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

இஸ்லாமாபாத் : 'தெற்காசியாவில், ஆண்டு கருவுறும் விகிதத்தில், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகியவை, முதலிரண்டு இடங்களில் உள்ளதாக, அமெரிக்க மக்கள் தொகை ஆவணக் கழகம் தெரிவித்துள்ளது.

இக்கழகம், இந்தாண்டின் சர்வதேச மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:தெற்காசிய பிராந்தியத்தில், பெண்கள் கர்ப்பம் தரிப்பதில், ஆப்கானிஸ்தான் முதலிடத்தை பிடித்துள்ளது. 3.89 கோடி பேர் வசிக்கும் இந்நாட்டில், ஓராண்டிற்கு, ஒரு தம்பதியின் கர்ப்பம் தரிப்பு விகிதம், 4.5 குழந்தைகள் என்ற அளவில் உள்ளது. பாகிஸ்தானில் 3.6 குழந்தைகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.இதே வளர்ச்சி தொடர்ந்தால், ௨௨.௯௦ கோடி பாக்., மக்கள் தொகை, 19.4 ஆண்டுகளில், இரட்டிப்பாகும்.இந்த பட்டியலில், 16.98 கோடி மக்கள் தொகையுள்ள, வங்கதேசம், 2.3 குழந்தைகளுடன், மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

மாலத்தீவு நான்காவது இடத்தையும், இந்தியா, நேபாளம் ஆகியவை, ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஒரு நாடு, மக்கள் தொகையை குறைக்க வேண்டுமென்றால், ஒரு தம்பதியின் ஓராண்டு கருவுறுதல் விகிதத்தை, 2.1 குழந்தைகள் என்ற அளவில் குறைக்க வேண்டும்.இது, 140 கோடி மக்கள் தொகை உள்ள, இந்தியாவில், 2.2 குழந்தைகள் என்ற அளவிற்கு உள்ளது. உலகிலேயே, தெற்காசியாவில் தான், கர்ப்பம் தரிப்பது வேகமாக அதிகரித்து வருகிறது. ஆசிய பிராந்தியத்தின் மக்கள் தொகை, 2050ம் ஆண்டில்,15 சதவீதம் உயர்ந்து, 460 கோடியில் இருந்து, 530 கோடியாக உயரும்.

இதே காலத்தில், தற்போது மக்கள் தொகையில், முதலிடத்தில் உள்ள சீனாவில், மக்கள் தொகை குறையும்.ஏனெனில், அங்கு, தம்பதியரின் ஓராண்டின் கருவுறுதல் விகிதம், 1.5 குழந்தைகளாக குறைந்துள்ளது. இது, 32.90 கோடி மக்கள் தொகையுள்ள, அமெரிக்காவில், 1.7 குழந்தைகள் என்ற அளவிற்கு உள்ளது.உலக மக்கள் தொகை, 780 கோடி என்ற போதிலும், கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. வரும்,2050ல், உலக மக்கள் தொகை, 25 சதவீதம் உயர்ந்து, 990 கோடியாக அதிகரிக்கும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X