விகாஸ் துபேக்கு துப்பாக்கி, 'சப்ளை' நெருங்கிய கூட்டாளி அதிரடி கைது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

கான்பூர் : 'என்கவுன்டரில்' கொல்லப்பட்ட ரவுடி விகாஸ் துபேயின் நெருங்கிய கூட்டாளியை, உத்தர பிரதேச மாநில போலீசார், நேற்று கைது செய்தனர்.

போலீசாரை கொல்வதற்கு, துபேக்கு, இவன் தான், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை, 'சப்ளை' செய்ததாக, தெரிய வந்துள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இங்கு, எட்டு போலீசாரை சுட்டுக் கொன்று விட்டு தப்பியோடிய பிரபல ரவுடி விகாஸ் துபேயை, மத்திய பிரதேசத்தில், அம்மாநில போலீசார் கைது செய்தனர்.2 லட்சம் ரூபாய்உ.பி., போலீசார், விகாஸ் துபேயை கான்பூருக்கு அழைத்து வரும்போது, அவன் தப்பியோட முயற்சித்தான். இதையடுத்து, போலீசார், அவனை சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், துபேயின் நெருங்கிய கூட்டாளியான ஜெய் பாஜ்பாய் என்பவனை, உ.பி., அதிரடிப்படை போலீசார், நேற்று கைது செய்தனர்.

போலீசாரை சுட்டுக் கொல்வதற்கு தேவையான துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் மற்றும் தப்பியோடுவதற்கு தேவையான வாகனங்கள், 2 லட்சம் ரூபாய் ஆகியவற்றை, பாஜ்பாய் தான், விகாஸ் துபேக்கு கொடுத்துள்ளான்.இது தொடர்பாக, பாஜ்பாயும், துபேயும் போனில் பேசியதற்கான ஆதாரங்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளன.இதையடுத்து, பாஜ்பாய் தலைமறைவாக இருந்தான். கைது செய்யப்பட்டுள்ள பாஜ்பாயையும், அவனது மற்றொரு கூட்டாளியையும், 15 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

அதிர்ச்சி : விகாஸ் துபே, 'என்கவுன்டர்' தொடர்பாக, சர்ச்சை எழுந்தததை அடுத்து, இது குறித்து விசாரிக்க, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது:துபே என்கவுன்டர் தொடர்பான விசாரணை குழுவுக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்க முடியாது.ஓய்வு பெற்ற நீதிபதி மற்றும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியை, மாநில அரசே நியமிக்கலாம்.

துபே போன்ற ஆபத்தான குற்றவாளிக்கு, ஏற்கனவே ஒரு வழக்கில் ஜாமின் அளிக்கப்பட்டு உள்ளது. சிறையிலிருந்து வெளியில் வந்ததால் தான், அவன், எட்டு போலீசாரை சுட்டுக் கொன்றுள்ளான்.இதுபோன்ற கொடூரமான குற்றவாளிக்கு ஜாமின் அளிக்கப்பட்டது, அதிர்ச்சி அளிக்கிறது; இது, சட்ட நடைமுறையில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். ரத்தக் கசிவால் மரணம்!ரவுடி விகாஸ் துபேயின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:விகாஸ் துபேயின் தோளில் ஏற்பட்ட குண்டு காயத்தால், அளவுக்கு அதிகமான ரத்தக் கசிவு ஏற்பட்டு, மரணம் நிகழ்ந்துள்ளது. துபேயின் உடலில், மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளன. இதுதவிர, துபேயின் தலை, தோள், வயிறு போன்ற பகுதிகளிலும் காயங்கள் உள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X