பொது செய்தி

தமிழ்நாடு

பஸ் தொழிற்சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
சென்னை : போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், வரும், 25ல், உண்ணாவிரத போராட்டம் அறிவித்துஉள்ளனர். அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், இணையவழியில் நடந்தது.இதில், அரசாணை அடிப்படையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அரசு போக்குவரத்து கழகங்கள்

சென்னை : போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர், வரும், 25ல், உண்ணாவிரத போராட்டம் அறிவித்துஉள்ளனர்.

அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும், தொ.மு.ச., - சி.ஐ.டி.யு., - ஏ.ஐ.டி.யூ.சி., - எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம், இணையவழியில் நடந்தது.இதில், அரசாணை அடிப்படையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை, அரசு போக்குவரத்து கழகங்கள் பின்பற்றாதது; ஊழியர்களுக்கு சம வாய்ப்புடன் பணி வழங்காதது; மருத்துவ விடுப்பு, மாற்றுப்பணி சம்பளம் வழங்காதது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்பின், 'அனைவருக்கும், முழு சம்பளம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் இடமாறுதல் கூடாது. 'தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரையும் கட்டாய பணிக்கு அழைக்கக் கூடாது' உள்ளிட்ட கோரிக்கைகளை, போக்குவரத்து செயலருக்கு கடிதம் வாயிலாக அனுப்பினர்.இந்த கோரிக்கைகளை, வரும், 24ம் தேதிக்குள் நிறைவேற்றா விட்டால், ஒவ்வொரு சங்கத்திலும், இருவர் வீதம், 25ம் தேதி, சென்னை, பல்லவன் இல்லத்தில், உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என, முடிவு செய்யப்பட்டது. அதற்கு ஆதரவளிக்கும் விதமாக, தொழிற்சங்க நிர்வாகிகள், போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர்களுக்கு, 'மிஸ்டு கால்' கொடுப்பது எனவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X