பொது செய்தி

இந்தியா

உளவு பார்க்கும் சீன நிறுவனங்கள்: மத்திய அரசு புகார்

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (15)
Share
Advertisement

புதுடில்லி: இந்தியாவில் உள்ள அலிபாபா, ஹூவே உள்ளிட்ட 7 சீன நிறுவனங்கள். அந்நாட்டுக்கு உளவு பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.



latest tamil news


கடந்த ஜூன் 15ம் தேதி இரவில், லடாக் அருகே, சீன எல்லையில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், இந்திய - சீன தரப்பு வீரர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டு, பெரும் மோதலாக மாறியது. சீன வீரர்கள், இரும்புத் தடி, இரும்புக் கம்பி, கற்கள் ஆகியவற்றின் மூலம் கொடூரமாக தாக்கியதில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில், சீன வீரர்கள், 43 பேர் இறந்ததாக கூறப்படுகிறது. அந்த நாட்டு ராணுவம் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை.

இதனையடுத்து தேசிய பாதுகாப்பு கருதி, டிக் டாக், ஹலோ, யுசி பிரவுசர், கேம் ஸ்கேனர் உள்ளிட்ட 59 சீன 'ஆப்'களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள பல சீன நிறுவனங்கள், அந்நாட்டு ராணுவத்துக்கு உளவு பார்ப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news


அலிபாபா, ஹூவே, டென்சென்ட், ஷின்ஷிங்ட் கேதே இன்டர்நேஷனல் குரூப், சைனா எலக்ட்ரானிக்ஸ் டெக்னாலஜி குரூப், ஷிண்டியா ஸ்டீல்ஸ், எஸ்ஏஐசி மோட்டார் கார்ப்பரேஷன் லிமி., ஆகிய 7 நிறுவனங்களை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. சீன 'ஆப்'கள் தடை செய்யப்பட்டது போல, இந்நிறுவனங்களுக்கும் தடை வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் இந்த நிறுவனங்கள் அனைத்தும் பல நூறு கோடி, முதலீடு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
22-ஜூலை-202002:40:16 IST Report Abuse
Ray நேற்று வரை இதெல்லாம் உளவுத்துறை அறியாமலே இருந்ததேன்? இப்போ ஒரேயடியாய் ஓலமிடுவதேன் வேணும்னா தூக்கி தலையில் வைத்து ஆடுவது வேண்டாம்னா ஒடனே தூக்கியெறிந்து தூற்றுவது இதான் நமது ராஜ தந்திரம்
Rate this:
Cancel
K.Muthuraj - Sivakasi,இந்தியா
21-ஜூலை-202009:36:37 IST Report Abuse
K.Muthuraj அந்த கம்பனிகள் ஒன்றும் வேவு பார்க்க அவசியமில்லை. இங்குள்ளவர்களே அந்த வேலை செய்திருப்பார்கள்.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
21-ஜூலை-202008:02:13 IST Report Abuse
thulakol சீனாவின் எல்லா ஆப் களையும் தடை செய்யுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X