மருத்துவமனை கட்ட நிதியின்றித் தவிக்கும் வடகொரியா; சிக்கலில் கிம்?

Updated : ஜூலை 20, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது ஓர் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார். கொரோனா தாக்கத்தை அடுத்து வடகொரியாவில் பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.பாக்ஸைட், சுரங்கத் தொழில், கிராஃபைட், செம்பு, துத்தநாகம், உணவு பதப்படுத்துதல் தொழில், மின் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தை

பியோங்யாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தற்போது ஓர் பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார். கொரோனா தாக்கத்தை அடுத்து வடகொரியாவில் பொருளாதாரம் மற்றும் மொத்த கொள்முதல் உற்பத்தி கடுமையாக பாதிப்படைந்துள்ளது.latest tamil newsபாக்ஸைட், சுரங்கத் தொழில், கிராஃபைட், செம்பு, துத்தநாகம், உணவு பதப்படுத்துதல் தொழில், மின் பொருட்கள் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்கள் நாட்டின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கின்றன.

இந்த ஆண்டு துவக்கத்தில் உற்பத்தி 6 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிகாரிகளை கடிந்து கொள்ளும் கிம், தற்போது மக்களால் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த தலைநகர் பியாங்யங்கில் மருத்துவமனை கட்ட வடகொரிய அரசு நிதி ஒதுக்கியது. இந்த கட்டடம் சரியாக கட்டி முடிக்கப்படவில்லை. இதன் கட்டுமானம் பாதியில் நிற்கிறது. இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதிகாரிகள் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து கடும் அதிருப்தியில் உள்ளார் கிம்.

இதனையடுத்து அதிகாரிகளை கண்டித்த அவர், மருத்துவமனை கட்டிமுடிக்கும் பணியை துரிதப்படுத்த உத்தரவிட்டார். சர்வாதிகார நாடான வடகொரியாவில் இருந்து எந்த செய்தி ஊடகமும், சர்வதேச ஊடகமும் உண்மையாக பாதிப்பு எண்ணிக்கையை வெளியிட முடியாது. இந்நிலையில் வடகொரியாவில் கொரோனா தாக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் கிம் பெருமிதம் தெரிவித்தார். ஆனால் மக்களின் நிலை மோசமாகவே உள்ளது.

வடகொரியா ஆடம்பர கட்டடங்கள் கட்ட நினைத்து அதிக செலவு செய்து அதனை முடிக்க முடியாமல் திணறிய சம்பவம் ஏற்கனவே அங்கு நடைபெற்று உள்ளது. 100 கட்டடங்கள் அடங்கிய வோன்சன் கல்மா சுற்றுலா தளம் அமைக்க 9 ஆண்டு காலம் ஆகின. இதேபோல 1987ம் ஆண்டு ருயுக்யாங் சொகுசு விடுதி கட்ட முற்பட்டு அதனை முடிக்க நிதி போதாமல் கட்டட வேலை பாதியில் நிறுத்தப்பட்டது.


latest tamil newsஇதேபோல பிரம்மாண்ட மருத்துவமனை கட்ட நினைத்து அதனை முடிக்க முடியாமல் தனது தந்தை கிம் சோ இல் போலவே கிம் ஜாங் உன் திணறி வருகிறார். சீனா தவிர வேறு உலக நாடுகளுடன் வர்த்தகம் செய்யாத வடகொரியாவின் ஏற்றுமதி முழுவதும் சீனாவையும் சீன கம்யூனிஸ அரசையுமே நம்பி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
21-ஜூலை-202007:51:51 IST Report Abuse
VENKATASUBRAMANIAN Where is our reporters, political advisor from dmk, congress and communists. Where our great RK communists, Kanagaraj, Aru and, rtc will they answer?
Rate this:
Cancel
21-ஜூலை-202007:15:43 IST Report Abuse
ஆப்பு சீன தொழிலாளர்கள் அமெரிக்காவின் அடிமைகள். வட கொரியா தொழிலாளர்கள் சீனாவுக்கு அடிமைகள். சீனா அடிவாங்குனா வட கொரியா 10 மடங்கு கடுமையா பாதிக்கப்படும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X