பொது செய்தி

தமிழ்நாடு

காட்சிப்பொருளான துணை விரிவாக்க மையங்கள்: அலுவலர்களை நியமிக்க எதிர்பார்ப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

உடுமலை:துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு அலுவலர்களை நியமித்து, கட்டடங்களை புதுப்பிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தின் கீழ், 114 கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில், அமராவதி, பி.ஏ.பி., பாசனத்திட்டம், மானாவாரி, கிணற்றுப்பாசனம் ஆகிய பாசனங்களில், 18,119 ெஹக்டேரில், விவசாய சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.விரிவாக்க மையம் அதிக கிராமங்களை உள்ளடக்கியுள்ளதால், விவசாயிகள் நலனுக்காகவும், வேளாண்துறை திட்டங்கள் குறித்த நேரத்தில், கிடைக்கவும் துணை வேளாண் விரிவாக்க மையங்கள், சாளையூர் மற்றும் குறிச்சிக்கோட்டை ஆகிய இடத்தில் துவங்கப்பட்டன.துணை வேளாண் விரிவாக்க மையங்களில், துணை வேளாண் அலுவலர் உட்பட பணியிடங்களும் நிரப்பப்பட்டன. குறிச்சிக்கோட்டை மையத்தில், கல்லாபுரம், எலையமுத்துார், மானுப்பட்டி உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் சேர்க்கப்பட்டன.சில ஆண்டுகளில், மையத்தில், காலியான துணை வேளாண் அலுவலர் உட்பட பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.அரசும், இத்திட்டம் குறித்து கண்டுகொள்ளாததால், மையங்கள் மூடப்பட்டு, கட்டடங்கள் காட்சிப்பொருளாக மாறின.பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாததால், சாளையூர் மைய கட்டடம், பயன்படுத்த முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.குறிச்சிக்கோட்டை மையம் அந்நிலையை நோக்கிச்சென்று வருகிறது. நால்ரோடு அருகிலுள்ள இக்கட்டடத்தின் முன்பகுதி மாட்டுத்தொழுவமாக மாற்றப்பட்டுள்ளது.முறையான பராமரிப்பு இல்லாததால், கட்டடத்தின் மேற்பகுதி சிதிலமடைந்து வருகிறது.இரவு நேரங்களில் சமூக விரோதிகள் தஞ்சமடையும் வகையில் கட்டடம் மாறியுள்ளது. துணை வேளாண் விரிவாக்க மையங்கள் மூடப்பட்டுள்ளதால், அனைத்து தேவைகளுக்கும், விவசாயிகள், உடுமலைக்கு வந்து செல்ல வேண்டியுள்ளது.தொலைதுாரத்திலிருந்து மானியம் உட்பட தேவைகளுக்காக உடுமலைக்கு வருவது சிரமத்தை அளிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, துணை வேளாண் விரிவாக்க மையத்திற்கு போதுமான அலுவலர்களை நியமித்து மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X