பாதாள சாக்கடை பணிகளால் மைதான ரோட்டில் பாதிப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 பாதாள சாக்கடை பணிகளால் மைதான ரோட்டில் பாதிப்பு

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்துக்கு செல்லும் ரோட்டில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடப்பதால், அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானம் மற்றும் குமரன் நகருக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக மைதான ரோடு உள்ளது.பாலக்காடு ரோட்டில் இருந்து வரும் வாகன ஓட்டுனர்கள், இவ்வழியாக குமரன் நகர் மற்றும் ஜமீன்முத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில், பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக இந்த ரோடு தோண்டப்பட்டு உள்ளது. ரோட்டில், ஆள் இறங்கும் குழிகள் அமைக்க குழி தோண்டப்பட்டு உள்ளது.இதனால், வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நடந்து செல்ல கூட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் கூறுகையில், 'பாலக்காடு ரோடு மேம்பால பணிகள் காரணமாக மைதானம் செல்லும் ரோடு வழியாகவும் வாகனங்கள் சென்று வந்தன. இந்நிலையில், பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால், வாகன போக்குவரத்து தடைபட்டுள்ளது. பணிகள் மந்தமாக நடப்பதால், பாதிப்பு அதிகமுள்ளது.ரோடும் சேறும், சகதியுமாக மாறியுள்ளதால், நடந்து செல்வோர் கீழே விழக்கூடிய அபாயம் உள்ளது. வாகன ஓட்டுனர்கள் அலைமோதுவதை தவிர்க்க பணிகள் நடைபெறும் இடத்தின் முகப்பு பகுதியில், அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.பணிகளை விரைந்து முடித்து உடனடியாக ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X