பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வினியோகம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மடத்துக்குளம்;மடத்துக்குளம் தாலுகா பகுதியில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வினியோகிக்கப்பட்டன.கொரோனா காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் வெளியில் செல்லாமல் வீட்டில் முடங்கியுள்ளனர். இவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையிலும், தொடர் கல்விக்காகவும், தமிழக அரசு நடப்பு கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12ம் வகுப்புக்கான பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது.மடத்துக்குளம் மற்றும் குமரலிங்கம் அரசு மேல்நிலை பள்ளியில் படிக்கும், 400 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, 2020 -- 21 ம் கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், ஒரு மணி நேரத்திற்கு, 25 மாணவர்கள் வீதம் பிரித்து தொடர்ச்சியாக நாள் முழுவதும், இவை வழங்கப்பட்டன. மடத்துக்குளம் தலைமை ஆசிரியர் பரிமளா, குமரலிங்கம் தலைமையாசிரியர் மாரியப்பன் மற்றும் சம்பந்தப் பட்ட பள்ளி ஆசிரியர்கள் புத்தகங்களை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X