அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வுக்கு எதிராக சதி வேலை: ஸ்டாலின்

Updated : ஜூலை 22, 2020 | Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (96)
Share
Advertisement
dmk, stalin, MK Stalin, திமுக, ஸ்டாலின்

சென்னை : 'சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றியை தடுக்க, சமூக வலைதளங்களில் தொடரும் சதி வேலைகளை முறியடிப்போம்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தொண்டர்களுக்கு, அவர் எழுதியுள்ள கடிதம்: தமிழக மக்களின் உரிமைகளுக்கும், நலனுக்கும் பாடுபட வேண்டிய பொறுப்பு, தி.மு.க.,வினருக்கு உள்ளது. மத்திய, மாநில ஆட்சியாளர்களால், அன்றாடம் அவதியுறும் மக்களின் நலன் காப்பதே, தி.மு.க.,வின் கடமை. கொரோனா காலத்திலும் முடங்கிக் கிடக்காமல், பொது மக்களின் துயர் துடைத்த கரங்கள், தி.மு.க.,வினரின் கரங்கள்.

அரசியலமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறி போகிற, இந்த அறிவிக்கப்படாத, 'எமர்ஜென்சி' காலத்தில், கல்வி, வேலைவாய்ப்பு, வேளாண் நிலங்கள், தொழில் துறை, வணிகர் நலன் போன்றவற்றை, பாதுகாக்க வேண்டிய அறப்போர்க் களத்தை கட்டியமைப்போம்.

அக்கப்போர் களங்களை புறக்கணிப்போம்.லோக்சபா தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க.,விற்கு வெற்றியை தேடித் தந்த மக்கள், விரும்புவது ஆட்சி மாற்றத்தை. அதை ஜனநாயக வழியிலான, தேர்தல் வாயிலாக நிறைவேற்ற வேண்டும் என்பதில், தி.மு.க., உறுதியாக இருக்கிறது.

மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ள, தி.மு.க., வெற்றியை தடுக்க வேண்டும் என்கிற, ஒரே நோக்கத்துடன், சமூக வலைதளங்களிலும், பிற வழிகளிலும் திசை திருப்பும் சதி வேலைகள் தொடர்கின்றன. அவற்றை முறியடித்து, லட்சிய பயணத்தை மேற்கொள்வோம்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
27-ஜூலை-202016:15:01 IST Report Abuse
skv srinivasankrishnaveni ஹஹஹாஹ் நீரேத்தான்யா உனக்கு எதிரி பயத்துடன் அலைபவன் தான் மத்தவாளை பயன்தெரி என்று பேசுவான் உமக்கு எல்லாம் நீரேத்தான் சர்வம் என்றபெராக்சையேதான் அதிகம்
Rate this:
Cancel
Venramani Iyer - chennai,இந்தியா
24-ஜூலை-202000:34:29 IST Report Abuse
Venramani Iyer தலைவா இந்த பம்மாத்து வேலை இங்க பலிக்காது . பக்கத்துல இந்த மரிதாஸ் தம்பி நீங்க பெரியார் சிலையை வைச்சு நிலத்தை பட்ட்டா போட்ட கதையை புட்டு புட்டு வைக்கிறார்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
23-ஜூலை-202018:48:15 IST Report Abuse
bal யாரும் சதி செய்ய வேண்டாம்...கந்த சஷ்டி கண்டனம் தெரிவிக்காத போதும் ஹிந்துக்கள் உங்களுக்கு வோட்டு போட்டாள் அவர்கள் மடயரகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X