கட்டுப்பாடுக்கு வந்தது தட்டுப்பாடு: தொற்று பரவலால் பெரும்பாடு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 கட்டுப்பாடுக்கு வந்தது தட்டுப்பாடு: தொற்று பரவலால் பெரும்பாடு

அவிநாசி:அவிநாசியில், கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கிழக்கு ரத வீதி அடைக்கப்பட்டது.அவிநாசியில், சமீபநாட்களாக, கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இருப்பினும் நகர வீதிகள், கடைகளில் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை. பொதுமக்கள், சமூக இடைவெளியின்றி நடமாடுகின்றனர்.சில நாட்களுக்கு முன், அவிநாசி பேரூராட்சி சார்பில், வியாபாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் அரசியல் கட்சியினைரை அழைத்து, கடைகளுக்கு நேரக்கட்டுப்பாடு விதிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.குறைந்தது ஒரு வார காலத்துக்கு, முழுஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், நேரக்கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என மற்றொரு தரப்பினரும் ஆலோசனை வழங்கினர். அதன்படி, கடைகள், காலை 10:00 மணி வரையும், பிற கடைகள் மதியம், 2:00 மணி வரை மட்டும் செயல்படுவது என, தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருவதற்கு முன்பதாகவே, வியாபாரிகள், தன்னார்வலர்கள் பலரும், பல்வேறு விமர்சனங்கள், விவாதங்களை கிளப்பினர். சமூக வலைதளங்களிலும் பரவவிட்டனர். இதற்கிடையில், மாவட்ட நிர்வாகமும், இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், நேர கட்டுப்பாடு விதிக்கும் முயற்சி, கிடப்பில் போடப்பட்டது.தற்போது, அவிநாசி, கிழக்கு ரத வீதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர், அங்குள்ள நகைக்கடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தொற்று உறுதியானது. இதனால், அந்த வீதி மீண்டும் அடைக்கப்பட்டுள்ளது.பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில், 'சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தலின் பேரில், கிழக்கு ரத வீதியில் உள்ள கடைகள், 7 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். கடைகளில் உள்ளவர்கள், வீதிகளில் வசிப்போருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X