பொது செய்தி

தமிழ்நாடு

வாழைக்கு பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு அறிவுரை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதி விவசாயிகள், வாழைக்கு பயிர் காப்பீடு செய்துகொள்ள, தோட்டக்கலைத்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோமதி கூறியதாவது:ஆனைமலை ஒன்றியத்தில், நடப்பு காரிப் பருவத்துக்கு, வாழைக்கு பயிர் காப்பீடு செய்ய திட்டம் ஒதுக்கப்பட்டு உள்ளது. திட்டத்தில் ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், காளியாபுரம், பெத்தநாயக்கனுார், தென்சித்துார், தென்சங்கம்பாளையம் மற்றும் மார்ச்சநாயக்கன்பாளையம் ஆகிய கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு, 10,917 ரூபாய் பிரிமீயமாக செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். அதீத மழை, மண் சரிவு, புயல், வறட்சி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் வாழை பாதிக்கும் போது, ஒரு ஹெக்டேருக்கு, இரண்டு லட்சத்து, 18 ஆயிரத்து, 348 ரூபாய் இழப்பீடாக பெறலாம்.திட்டத்தில் பயன்பெற, இரண்டு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் நகல், அடங்கல், விதைப்பு சான்றிதழுடன், பொது சேவை மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X