இந்து முன்னணி சார்பில் 400 இடத்தில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இந்து முன்னணி சார்பில் 400 இடத்தில் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 20, 2020
Share
 இந்து முன்னணி சார்பில் 400 இடத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்:கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டத்தினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டத்தில், 400 இடங்களில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கந்த சஷ்டி கவசத்தை, 'கருப்பர் கூட்டம்' என்ற 'யூ டியூப்' சேனலில் கொச்சைப்படுத்தி விமர்சனம் செய்தனர். இதற்கு, பல்வேறு தரப்பினர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அவர்களை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும், உண்மை குற்றவாளி கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டத்தில், 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அவ்வகையில், மாநில செயலாளர்கள் கிஷோர் குமார், செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் திருப்பூர் புஷ்பா சந்திப்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன் தலைமையில் புதிய பஸ் ஸ்டாண்டில் நடந்தது. ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று, கருப்பர் கூட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X