பொது செய்தி

தமிழ்நாடு

போட்டி தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, போட்டி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

நாடு முழுதும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பிளஸ் 2 வரை, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, மத்திய அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த உதவித்தொகை பெற, போட்டி தேர்வு வழியாக, மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும், பள்ளி கல்வித் துறையால் போட்டி தேர்வு நடத்தப்படும். தமிழகத்தில், 2௦௧9 - 20ம் கல்வி ஆண்டில் படித்த, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, டிசம்பர், 15ல் தேர்வு நடந்தது. அதன் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இரண்டு லட்சம் மாணவர்கள் எழுதிய இந்த தேர்வில், 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.இது குறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பட்டியல், பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தகுதி பெற்ற தேர்வர்களுக்கு, வரும் ஆண்டுகளில், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான ஏற்பாடுகளை, தலைமை ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X