மழை நீர் வீணாகாமல் சேமிக்க உழவு பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீர் வீணாகாமல் சேமிக்க உழவு பணி

Added : ஜூலை 20, 2020
Share
பொள்ளாச்சி:மழை நீரை சேமித்து, தென்னைகளுக்கு கூடுதல் பாசனம் அளிக்கும் நடவடிக்கையில், நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின், வடமேற்கு பகுதியானது, பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவை ஒட்டிய இப்பகுதியில், தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்வது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, எதிர்பார்த்த அளவு மழை பெய்வதால்,

பொள்ளாச்சி:மழை நீரை சேமித்து, தென்னைகளுக்கு கூடுதல் பாசனம் அளிக்கும் நடவடிக்கையில், நிலத்தை உழும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தின், வடமேற்கு பகுதியானது, பாலக்காட்டு கணவாய் பகுதியில் அமைந்துள்ளது. கேரளாவை ஒட்டிய இப்பகுதியில், தென்மேற்கு பருவமழை கூடுதலாக பெய்வது வழக்கம்.கடந்த இரண்டு ஆண்டுகளாக, எதிர்பார்த்த அளவு மழை பெய்வதால், விவசாயிகள் மழை நீரை தேக்கி வைக்க துவங்கியுள்ளனர். மழைக்கு முன், தென்னை சாகுபடி நிலங்களை, சுத்தப்படுத்தி உழவு பணி மேற்கொண்டு உள்ளனர்.பெரும்பதி உழவர் மன்ற தலைவர் திருவேங்கடம் கூறுகையில், ''ஆண்டு தோறும், தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன், நிலங்களில் முளைத்துள்ள களைச்செடிகளை, மடக்கி உழுது மட்க செய்யப்படுகிறது.இதனால், மழை நீர் முழுவதும் மண்ணில் தேங்கும். மண்ணில் உள்ள சத்துக்கள் பரவலாக்கப்படுகிறது. பயிர்கள் சீரான வளர்ச்சி கண்டு, கூடுதல் மகசூல் கொடுக்கிறது,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X