ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆடி அமாவாசை சிறப்பு யாக பூஜை

Added : ஜூலை 20, 2020
Share
 ஆடி அமாவாசை  சிறப்பு யாக பூஜை

பல்லடம்:பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவக்கிரக கோட்டையில், நேற்று ஆடி அமாவாசை கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது.கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீசிவலிங்கேஸ்வர சுவாமிகள் பங்கேற்று, பூஜைகளை நடத்தினார். உலகை அச்சுறுத்தி வரும், கொரோனா நோய் தொற்றில் இருந்து மக்களை காக்க வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. விநாயக பெருமான், நவக்கிரகங்கள் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் தம்பதி சமேதராக சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சமூக இடைவெளியுடன் குறைந்த அளவிலான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X