சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலம் அள்ளிய விவகாரம் கலெக்டருக்கு, 'நோட்டீஸ்'

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : பட்டியலின சிறுவனை அடித்து, கையால் மலம் அள்ள வைத்த சம்பவம் தொடர்பாக, தர்மபுரி கலெக்டரும், எஸ்.பி.,யும் அறிக்கை தாக்கல் செய்ய, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கொடாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த, 14 வயது சிறுவன்; அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். பட்டியலின வகுப்பைச் சார்ந்த அச்சிறுவன், 15ம் தேதி, அப்பகுதியில், வயலுக்கு மலம் கழிக்க சென்றுள்ளார்.அப்போது, ராஜசேகர் என்பவர், தன்னுடைய நிலத்தில் மலம் கழித்ததாக கூறி, சிறுவனின் ஜாதி பெயரை குறிப்பிட்டு, கடுமையாக தாக்கியதோடு, மலத்தை கையால் அள்ள வைத்துள்ளார். இது குறித்து, மாநில மனித உரிமைகள் ஆணையம், தாமாக முன்வந்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி சித்தரஞ்சன் மோகன்தாஸ், தர்மபுரி கலெக்டர், எஸ்.பி.,க்கு அனுப்பியுள்ள நோட்டீசில், 'இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி, நான்கு வாரத்திற்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X