பொது செய்தி

தமிழ்நாடு

ரூ. 10,399 கோடியில் புதிய முதலீட்டு திட்டங்கள்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : தமிழகத்தில், எட்டு தொழில் நிறுவனங்கள், தங்கள் புதிய முதலீட்டு திட்டங்களை, 10 ஆயிரத்து, 399 கோடி ரூபாயில், தமிழகத்தில் துவக்க முன் வந்துள்ளன.அந்த நிறுவனங்களுடன், முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்திடவும், தொழில் துறையில் தொடர்ந்து, முன்னணி மாநிலமாக திகழவும், தமிழக அரசின் தொழில் துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தொழில் துறை சார்பில், மே, 27ல், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 17 தொழில் நிறுவனங்களுடன், 15 ஆயிரத்து, 128 கோடி ரூபாய் முதலீட்டிற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இத்திட்டங்களால், 47 ஆயிரத்து, 150 பேருக்கு, புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இதன் தொடர்ச்சியாக, நேற்று தலைமை செயலகத்தில், முதல்வர் இ.பி.எஸ்., முன்னிலையில், எட்டு புதிய தொழில் திட்டங்களை, 10 ஆயிரத்து, 399 கோடி ரூபாய் முதலீட்டில், தமிழகத்தில் துவக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.எட்டு திட்டங்களில், ஐந்து திட்டங்களுக்கு நேரடியாகவும், மூன்று திட்டங்களுக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவற்றின் விபரம்: காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் உள்ள, இண்டோஸ்பேஸ் தொழிற்பூங்காவில், விக்ரம் சோலார் நிறுவனம், 5,423 கோடி ரூபாய் முதலீட்டில், 7,542 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சோலார் செல்ஸ் அண்ட் மாடுல்ஸ் உற்பத்தி செய்தல்

 காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 1,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், சி.ஜி.டி., சாத்ரை பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின், தொழிற்பூங்கா அமைத்தல் கோவை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், அக்வசப் நிறுவனத்தின் திட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில், 200 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், என்.டி.ஆர்., உள்கட்டமைப்பு நிறுவனம், 125 ஏக்கரில் தொழிற்பூங்கா அமைக்கும் திட்டம் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில், 36 கோடி ரூபாய் முதலீட்டில், 465 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஜி.ஐ., அக்ரோ டெக் நிறுவனத்தின், முந்திரி பதப்படுத்தும் திட்டம்

 செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில்,- ஒரகடம் நெடுஞ்சாலையில், 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், 2,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், ஹிராநந்தினி குழுமத்தை சேர்ந்த, 'யோட்டா' நிறுவனத்தின், தகவல் மையம் அமைக்கும் திட்டம் கோவை மாவட்டத்தில், 250 கோடி ரூபாய் முதலீட்டில், 600 பேருக்கு, வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், இ.எல்.ஜி.ஐ., எக்விப்மென்ட்ஸ் நிறுவனத்தின், ஏர் கம்ப்ரசர்ஸ் உற்பத்தி திட்டம் ஈரோடு மாவட்டம், சிப்காட் பெருந்துறை தொழிற்பூங்காவில், 40 கோடி ரூபாய் முதலீட்டில், ஜே.எஸ்., ஆட்டோ காஸ்ட் நிறுவனத்தின், விரிவாக்க திட்டம்இந்த எட்டு திட்டங்களால், 13 ஆயிரத்து, 507 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலர் சண்முகம், தொழில் துறை முதன்மை செயலர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X