பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்களுக்கு ஊட்டச்சத்து உணவு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து, அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

சென்னையை சேர்ந்த, வழக்கறிஞர் ஆர்.சுதா தாக்கல் செய்த மனு:ஊரடங்கு உத்தரவால், பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவு கிடைப்பது இல்லை. இந்த நேரத்தில், அவர்களுக்கு சத்தான உணவு கிடைக்க வேண்டும். அதனால், குழந்தைகளின் வீடுகளுக்கு சென்றோ அல்லது ரேஷன் கடைகளில், சத்தான உணவுப் பொருள் வழங்கவோ ஏற்பாடு செய்யலாம்.தமிழகம் முழுவதும், 407 இடங்களில், 'அம்மா' உணவகங்கள் உள்ளன.

சென்னையில் மட்டும், 200 இடங்களில் உள்ளன. இந்த உணவகங்களிலும், சைவ உணவு மட்டுமே வழங்கப்படுகிறது. இங்கு முட்டை வழங்க பரிசீலிக்கலாம். இதனால், பொது மக்களுக்கும் சத்தான உணவு கிடைக்கும்.எனவே, மதிய உணவு திட்டத்தில் மாணவர்களுக்கு, சத்தான உணவு வழங்கவும், அம்மா உணவகத்தில் முட்டை உள்ளிட்ட சத்துணவு வழங்கவும், திட்டம் வகுக்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு சார்பில், சிறப்பு பிளீடர் முத்துகுமரன் ஆஜராகி, ''எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியாக, வைட்டமின் மாத்திரைகள் வழங்க முடியாது. ரேஷன் கடைகள் வழியாக, தற்போது சத்தான உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ''அதை இன்னும் மேம்படுத்தி வழங்க, அரசு பரிசீலனை செய்கிறது,'' என்றார்.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அருகில் உள்ள மாநிலங்களில், முட்டை வழங்கப்படுகிறது. தமிழகத்திலும், முட்டை வழங்கலாம். 'அம்மா உணவகங்களில், இலவச முட்டை வழங்குவது என, அரசு கொள்கை முடிவெடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது' என்றார்.இதையடுத்து, குழந்தை களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க, அரசு எடுத்த நடவடிக்கை குறித்து பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X