பொது செய்தி

தமிழ்நாடு

முக கவசத்துடன் கார் ஓட்டிய ரஜினி அமாவாசையன்று கட்சி ஆலோசனை

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

'கொரோனா பாதிப்பு நீங்கும் வரை, நடிகர் ரஜினி யாரையும் சந்திக்க மாட்டார்; வீட்டை வீட்டு வெளியே வரமாட்டார்; நவம்பரில் தான் கட்சி பணிகளை துவக்குவார்' என்றெல்லாம் தகவல்கள் பரவிய நிலையில், நேற்று திடீரென முகக் கவசம் அணிந்தபடி, ரஜினி கார் ஓட்டிச் சென்ற படம், சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

நடிகர் ரஜினி, ஓரிரு மாதங்களாக, கேளம்பாக்கத்தில் உள்ள தன் பண்ணை வீட்டில், குடும்ப உறுப்பினர்களுடன் தங்கியிருந்தார்.'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ரசிகர்களுக்கு கொரோனா பாதுகாப்பு குறித்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். 'நவம்பரில், ரஜினி கட்சி துவக்க உள்ளார். கொரோனா தொற்று பரவல் நீடிக்கும் பட்சத்தில், தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கப்படும் வரை, ரஜினி வெளியே வர மாட்டார். 'அவர், தன் வீட்டில் யாரையும் சந்திக்க மாட்டார். படங்களில் நடிக்க மாட்டார். அரசியல் கட்சி துவங்க மாட்டார்' என்றெல்லாம், சமூகவலை தளங்களில் தகவல்கள் பரவின.

ஆனால், ரஜினியோ, 'கெத்தாக' தன் மருமகன் காரில், முகக் கவசம் அணிந்தபடி, நேற்று தன் போயஸ்கார்டன் வீட்டில் இருந்து, வெளியே கிளம்பி சென்றார்.'ரஜினி கட்சி துவக்கினால், வரும் சட்டசபை தேர்தலில், ௧௬௦ தொகுதிகளில் வெற்றி பெறுவார்' என, ஜோதிடர் ஒருவர் கூறியதாகவும், ஆடி அமாவாசையான நேற்று நல்ல நாள் என்பதால், தன் நண்பரை சந்தித்து, கட்சி துவக்குவது குறித்து, முக்கிய பணியை துவக்கியதாகவும் கூறப்படுகிறது.வீழ்வேனென்று நினைத்தாயோ... நான் சென்னை... என்ற தலைப்பில், முகக் கவசத்துடன், ரஜினி கார் ஓட்டிச் செல்லும் படம், சமூக வலைதளங்களில், நேற்று வேகமாக பரவியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X