பொது செய்தி

தமிழ்நாடு

பிரதம மந்திரி காப்பீடு திட்டம்: விவசாயிகளுக்கு அழைப்பு

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

அன்னூர்:பயிர் காப்பீடு செய்ய, தோட்டக்கலைத்துறை விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் மதுபாலா வெளியிட்டுள்ள அறிக்கை :அன்னூர் வட்டார விவசாயிகள், பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தில், பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம். வறட்சி, மழை, காற்று, நோய் ஆகியவற்றால், பயிர் சேதமடைந்தால், காப்பீட்டின் மூலம் இழப்பீடு பெறலாம்.மஞ்சள் பயிருக்கு, ஒரு ஏக்கருக்கு, 3,975 ரூபாயும், வாழைக்கு, 4,420 ரூபாயும், மரவள்ளிக்கு, 584 ரூபாயும் பிரீமியம் செலுத்த வேண்டும்.மஞ்சள் பயிருக்கு வரும், 31ம் தேதியும், மரவள்ளி மற்றும் வாழைக்கு ஆக., 31ம் தேதியும் காப்பீடு செய்ய இறுதி நாளாகும். மேலும் விவரங்களுக்கு, 97919 98833, 99433 66422 ஆகிய எண்களுக்கு, தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X