கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவில் உயிரிழந்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்த உரிய அவகாசம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

சென்னை : கொரோனா வைரஸ் பாதித்து, இறப்பவர்களின் உடலுக்கு, இறுதி அஞ்சலி செலுத்த, போதிய அவகாசம் அளிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த நரம்பியல் மருத்துவர், சைமன் ஹெர்குலிஸ், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிர்இழந்தார். அவரது உடலை, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்ய எடுத்து சென்ற போது, அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, வன்முறையில் ஈடுபட்டனர். பின், வேலங்காடு மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்றமே வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
விதிமுறைகள் : இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, அரசு தரப்பில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றி பதில் அளிக்க, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இவ்வழக்கு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில், அரசு பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ''கொரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது தொடர்பாக, மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளின் அடிப்படையில், தமிழக அரசும் உரிய உத்தரவு பிறப்பித்து உள்ளது. ''விதிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்று கிறோம்,'' என்றார்.

வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த டாக்டர் சைமனின் மனைவி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ரவிகுமார் பாலும், வழக்கறிஞர் இளம்பாரதியும், ''சைமனின் உடலை அடக்க செய்ய, உரிய அவகாசம் அளிக்கவில்லை. ''மத ரீதியான சடங்குகளை முறையாக மேற்கொள்ளவும் அனுமதிக்கவில்லை,'' என்றனர்.மதிப்பளியுங்கஇதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: மத்திய அரசு வகுத்துள்ள விதிகளை, கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் போது, மத ரீதியான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.இறுதி அஞ்சலி செலுத்த, குடும்பத்தினருக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும். அசம்பாவிதம் நடக்காமல் இருக்க, போலீஸ் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X