சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காதலியை கொன்றவர் சிக்கினார்: கொலை முயற்சி வழக்கும் பாய்ந்தது

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

வடவள்ளி:பேரூர் அருகே, காதலியை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர் மீது, வடவள்ளி போலீஸ் ஸ்டேஷனில், மேலும் ஒரு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.பேரூர் செட்டிபாளையத்தை சேர்ந்த சக்திவேல் மகள் ஐஸ்வர்யாவை, அதேபகுதியை சேர்ந்த ரித்தீஷ் என்பவர் காதலித்து வந்தார். ஐஸ்வர்யா, ரித்தீஷின் காதலை மறுத்துள்ளார். கோபமடைந்த ரித்தீஷ், ஐஸ்வர்யாவை கத்தியால் குத்தி கொலை செய்தார்.பேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த ரித்தீஷை தேடி வந்தனர். இந்நிலையில், ரித்தீஷ் வடவள்ளி, வி.என்.ஆர். நகரில் இருப்பதாக, சக்திவேலின் தம்பி முருகேசனுக்கு தகவல் கிடைத்து அங்கு சென்றுள்ளார்.ரித்தீஷ்க்கும், முருகேசனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ரித்தீஷ் கத்தியால் குத்தியதால், நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக, முருகேசன் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில், வடவள்ளி போலீசார், ரித்தீஷ் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X