பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தொற்றுக்கு மதுரை எஸ்.ஐ., பலி

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement

மதுரை : மதுரை மாவட்ட போலீஸ் துறையில், முதல் முறையாக, செக்கானுாரணி எஸ்.ஐ., கொரோனாவுக்கு பலியானார்.

மதுரை, செக்கானுாரணி போலீஸ் ஸ்டேஷனுக்கு, இரு வாரங்களுக்கு முன், புகார் அளிக்க வந்த ஒருவருக்கு, கொரோனா உறுதியானது. இதையடுத்து, போலீசாருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது.இதில், எஸ்.ஐ., பாண்டி, ௫௧, என்பவருக்கு தொற்று உறுதியானது. கப்பலுாரில் போலீசாருக்கான, 'கோவிட் கேர்' சென்டரில் அனுமதிக்கப்பட்டார்.சில நாட்களில் மூச்சு திணறல் ஏற்பட, மதுரை அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.நேற்று முன்தினம், பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். இவருக்கு மனைவி, இரு மகன்கள், மகள் உள்ளனர்.

மாவட்ட போலீசாரில், 55 பேர், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 பேர் குணமடைந்த நிலையில், ஐந்து பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில், பாண்டி இறந்தது, சக போலீசாரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.விழுப்புரம் மாவட்டம், கீழ்பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் கவியரசு, 48; கடலுார் மாவட்டம், விருத்தாசலம் தாசில்தாராக இருந்தவர், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்.கடந்த, 10ல், அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு, 18ல் இறந்தார். மாவட்டம் முழுதும் அரசு அலுவலகங்களில், மறைந்த தாசில்தார் கவியரசுக்கு, நேற்று மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் சந்திரசேகர சகாமுரி, கவியரசு படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.டி.ஆர்.ஓ., ராஜகிருபாகரன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X