சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தேசிய மாணவர் படை ஆண்டு கூட்டு பயிற்சி முகாம் நடந்தது. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 6வது பட்டாலியன் சார்பில் தேசிய மாணவர் படையின் ஆண்டு கூட்டுப் பயிற்சி முகாம் நடந்தது. லெப்டினட் கர்னல் அய்யப்பன் சாமி தலைமை தாங்கினார். என்.சி.சி., மாணவ, மாணவிகளுக்கு துப்பாக்கியை கையாள்வது, பராமரிப்பது, துப்பாக்கியின் பாகங்களையும், அவை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அவில்தார் அன்பழகன் விளக்கி பேசினார். பயிற்சியில் கடலூர், விழுப்புரம், நாகை மாவட்டங்களில் இருந்து 7 கல்லூரிகள் மற்றும் 23 பள்ளிகளில் இருந்து 700 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். என்.சி.சி., அலுவலர் பால்ராஜ் வரை படத்தை பயன்படுத்தி இருக்கும் இடத்தில் இருந்து மற்றொரு குறிப்பிட்ட இடத்திற்கு எவ்வாறு செல்வது என்பதையும், மேக்னடிக் காம்பஸ் பயன்படுத்தி குறிப்பிட்ட திசை மாறாமல் சென்றடைவது எப்படி என்பதையும் விளக்கினார். முகாமில் 14 என்.சி.சி., அலுவலர்கள் மற்றும் 15 ராணுவ பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.