பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று பாதிப்பு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

Added : ஜூலை 20, 2020
Share
Advertisement
 தொற்று பாதிப்பு பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சி சரோஜினி வீதியில், மருத்துவ முகாம் நேற்று நடந்தது.பொள்ளாச்சி நகராட்சி சரோஜினி வீதியில், 26 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியானது. அந்த இடத்தை சப் - கலெக்டர் வைத்திநாதன், நகராட்சி கமிஷனர் காந்திராஜ், தாசில்தார் தணிகைவேல் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு மருத்துவ முகாம் நடத்தவும்; கபசுர குடிநீர் வினியோகித்தல், கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.இந்நிலையில், சரோஜினி வீதியில் நேற்று மருத்துவ முகாம் நடந்தது. அப்பகுதி மக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என காமாட்சி நகர் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். சித்தா மருந்தாளுனர் காமராஜ், கபசுர குடிநீர் வினியோகித்தார்.அதிகாரிகள் கூறுகையில், 'தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில், 48 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இரும்பு சத்து மாத்திரை மற்றும் வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டன,' என்றனர். இதேபோன்று, பொள்ளாச்சி கே.வி.ஆர்., நகரில், இறந்த மூதாட்டிக்கு கொரோனா தொற்று உறுதியானது. கே.வி.ஆர்., நகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. மூதாட்டியின் மகன்கள் உள்ளிட்ட எட்டு பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.நியூ அழகப்பா லே - அவுட் பகுதியில் மூதாட்டிக்கு தொற்று உறுதியானதால், அந்த குடும்பத்தை சேர்ந்த, ஐந்து பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X