அரசியல் செய்தி

தமிழ்நாடு

மனநோய்க்கு மருந்து எடுத்து, விரைவில் குணமடையுங்கள் ; அமைச்சர் வேலுமணி

Added : ஜூலை 20, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
மனநோய்க்கு மருந்து எடுத்து, விரைவில் குணமடையுங்கள் ; அமைச்சர் வேலுமணி

சென்னை : 'மக்களை பயமுறுத்தி, பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்து, ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டும்' என, உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

அவர் தன், 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:முதல்வர் வழிகாட்டுதலில் அமைச்சர்களும், அதிகாரிகளும் இணைந்து, களத்தில் தைரியமாக நின்று, சென்னையில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தி உள்ளனர். பெங்களூரு, மும்பை, டில்லி நகரங்கள் முழுதும், இன்னமும் முடங்கியுள்ளன. இந்நிலையில், சென்னையை ஒட்டுமொத்த இந்தியாவே திரும்பி பார்க்கும் சூழலில், நோய் தொற்று விகிதம் அரும்பாடுபட்டு, 9.12 சதவீதம் என்ற, ஒற்றை இலக்கத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களுக்கு மாபெரும் நம்பிக்கையை, மாநில சுகாதார துறையுடன் இணைந்து, மாநகராட்சி சாதித்து காட்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனாவை வைத்து, மக்களை பயமுறுத்தி, அறிக்கை அரசியல் செய்கிறார் ஸ்டாலின். அரசை விடுங்கள்; மீண்டு வரும் சென்னை மக்களின் நம்பிக்கையை, மனதார பாராட்டுங்கள். மக்களை பயமுறுத்தி, பீதிக்குள்ளாக்கும் மனநோய்க்கு மருந்து எடுத்து, விரைவில் குணமடையுங்கள்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
21-ஜூலை-202012:42:39 IST Report Abuse
thamodaran chinnasamy நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு நல்ல பதிவு. உண்மையும் அதுதான். மன நோயாளிக்கு மருந்து அவருடைய இயலாமையே.
Rate this:
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
21-ஜூலை-202009:47:17 IST Report Abuse
Chandramoulli தமிழக அரசு செய்ய தவறிய விஷயம் கார்பொரேஷன் கமிஷனர் பிரகாஷ் அவர்களை இன்னமும் அதே பதவியில் அமர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது. நோயின் தீவிரம் இருக்கும் பொது துரித கதியில் செயல்படாமல் வேலையை பிரித்து கொடுக்காமல் தானே எல்லாம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மக்களை அவதிக்கு உள்ளாக்கியவர். ராதாகிருஷ்ணன் அவர்கள் வந்த பிறகு தான் நிலைமை கட்டுக்குள் வந்தது. அமைச்சர் அவர்கள் இந்த விஷயத்தில் சரியான முடிவு எடுக்க தவறி விட்டார்
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
21-ஜூலை-202007:57:06 IST Report Abuse
RajanRajan சரி எதோ ஒரு அம்மாவழி நல்ல காரியம் அய்யாவழிக்கு நடந்தா சரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X