தமிழ்நாடு

கோவை மதுக்கடைகளில் போதை மட்டுமல்ல! கொரோனாவும் கிடைக்கும்!

Updated : ஜூலை 21, 2020 | Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
கோவை மதுக்கடைகளில் போதை மட்டுமல்ல! கொரோனாவும் கிடைக்கும்!

கோவை மாவட்டத்தில் தெற்கு, வடக்கு கட்டுப்பாட்டில், 295 மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மதுபானங்கள் சரக்கு வாகனங்களில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து, சப்ளை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் தற்போது, பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், அங்கிருந்து ஏற்றி வரும் மதுபாட்டில்கள், ஓட்டுனர்கள் வாயிலாக தொற்று பரவல் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

மாவட்டத்தில் இதுவரை, டாஸ்மாக் ஊழியர்கள் மூன்று பேருக்கு, தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் சமூக இடைவெளி உட்பட, எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை என்று புகார் வாசிக்கின்றனர், டாஸ்மாக் ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் சிலர்.அவர்கள் கூறுகையில், 'மது வாங்க வருபவர்களை, தெர்மல் ஸ்கேனர் வாயிலாக சோதிப்பது இல்லை. வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவதே இல்லை. மதுபானம், பாட்டில்கள் தயார் செய்பவர்கள், அதை பேக் செய்பவர்கள், வாகனங்களில் ஏற்றுபவர்கள் தவிர, சென்னையில் மதுபாட்டில்கள் ஏற்றும் செயல்பாடுகளில் யாரேனும் ஒருவருக்கு, தொற்று இருந்தாலும் பிற மாவட்டங்களில், பரவும் அபாயம் உள்ளது.
ஊழியர்களிடம் மதுவாங்கும் குடிகாரர்களுக்கு, பரவ வாய்ப்புள்ளது' என்றனர்.இந்த குற்றச்சாட்டு குறித்து, முதுநிலை மண்டல மேலாளர் சாதனைகுரலிடம் கேட்டோம்.அதற்கு அவர் கூறியதாவது:டாஸ்மாக் மதுக்கடைகளில், அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கடைக்கும், 5 லிட்டர் வீதம் இரண்டு முறை கிருமிநாசினி, 500 எம்.எல்., கிருமிநாசினி பாட்டில்கள், முககவசம், கையுறைகள், பேஸ் சீல்டு, போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் மட்டுமின்றி, உரிய சத்து மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
தவிர, மதுபானங்களை கொண்டு வருபவர்கள், சோதனை சாவடிகளில் பரிசோதிக்கப்பட்டே அனுமதிக்கப்படுகின்றனர். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்படுவதில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் சமயங்களில், ஊழியர் ஒருவர் சமூக இடைவெளியை, உறுதிசெய்யும் பணியை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
இவர் கூறுவதையெல்லாம், சோதனைச்சாவடிகளிலும், மதுக்கடைகளிலும் எவரும் பின்பற்றியதாக தெரியவில்லை. பின்பற்றியிருந்தால், ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே, வைரஸ் தொற்று தவிர்க்க ஒன்று, மதுக்கடைகளை தற்காலிகமாக மூட வேண்டும். அல்லது, மது விற்பனைக்கான விதிமுறைகளை, கடுமையாக அமல்படுத்த வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X