சர்க்கரை ஆலை சுற்றுச் சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை ஆலை சுற்றுச் சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை

Added : ஜூலை 21, 2020
Share

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கனிம வள நிதி ரூ. 50 லட்சத்தில் வளாகத்தை சுற்றி புதிய சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது.ஆலையின் தலைவர் பாலசுந்தரம் கோரிக்கையேற்று, முன்னாள் எம்.பி., அருண் மொழிதேவன் பரிந்துரையின் பேரில், சேத்தியாத்தோப்பு சர்க்கரை ஆலையில் சுற்றுச் சுவர் கட்ட, அமைச்சர் சண்முகம் கனிம வள நிதி ரூ.50 லட்சம் ஒதுக்கியுள்ளார்.சர்க்கரை ஆலைத் தலைவர் பாலசுந்தரம் தலைமை தாங்கி, புதிய சுற்றுசுவர் கட்டுவதற்கான பூமி பூஜையை துவக்கினார். புவனகிரி ஒன்றிய சேர்மன் சிவப்பிரகாசம், ஆலையின் துணைத்தலைவர் வினாயகமூர்த்தி, தலைமை கரும்பு அலுவலர் மணிமாறன், ஜெயசீலன், நகர செயலர் மணிகண்டன் ஒப்பந்தக்காரர் பாலகுரு வகித்தனர். ஆலை அலுவலக மேலாளர் முனியம்மாள் வரவேற்றார்.கரும்பு அலுவலர்கள் ரவிகிருஷ்ணன், ராஜதுரை, கரும்பு உதவியாளர்கள் அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X