சிறப்பு பகுதிகள்

கந்தனுக்கு அரோஹரா

சஷ்டி கவசத்துக்கு இழுக்கு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement
 சஷ்டி கவசத்துக்கு இழுக்கு

உடுமலை:உடுமலையில், 36 இடங்களில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்க்கடவுள் முருகனை வழிபடும் வகையிலும், கந்த சஷ்டி கவசத்தில் ஒவ்வொரு உறுப்புகளையும் காக்க வேண்டியும், முருகப்பெருமானை வேண்டுகிறோம்.மக்களின் மனதை புண்படுத்தும் வகையிலும், இந்து மதம், பண்பாட்டை தொடர்ந்து அவமரியாதை செய்து வரும் கறுப்பர் கூட்டத்தை கண்டித்தும், இது போன்ற செயல்களை தடுக்கும் வகையில் அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், வீடு தோறும் கந்த சஷ்டி கவசம் பாடுவோம், என வலியுறுத்தி, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், 36 இடங்களில், கோவில்கள் முன், இந்து முன்னணி சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் வீரப்பன்,நிர்வாகிகள் பபீஸ், ராஜ்குமார், திலீப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.வால்பாறைவால்பாறையில், கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வீடுகளின் முன் கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டது.இந்நிலையில், இந்துக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில்,வால்பாறை காந்திசிலை வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பால்துரை, துணைத்தலைவர் வெற்றிவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X