ஜூலை 24-ல் வாக்குமூலம் அளிக்கும் அத்வானி

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (9)
Share
Advertisement
ஜூலை 24-ல்  வாக்குமூலம் அளிக்கும் அத்வானி

லக்னோ: பாபர் மசூதி இடிப்பு வழக்கில், முன்னாள் துணை பிரதமர், எல்.கே.அத்வானி, 24ம் தேதி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை, ஆக., 31க்குள் முடிக்க, உ.பி.,யின் லக்னோவில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்திற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதையடுத்து, விசாரணை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.


latest tamil news



இந்நிலையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள, முன்னாள் துணை பிரதமர், எல்.கே.அத்வானி, 92, அவரது வாக்குமூலத்தை, வரும், 24ம் தேதி, 'வீடியோ கான்பரஸ்' வாயிலாக பதிவு செய்ய வேண்டும் என, சிறப்பு நீதிபதி, எஸ்.கே.யாதவ் உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல், பா.ஜ., தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் வாக்குமூலம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, நாளை மறுநாள் பதிவு செய்யப்படவுள்ளது.குற்றவியல் நடைமுறை சட்டம், 313ன் கீழ், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், தங்களை குற்றமற்றவர்கள் என, உறுதி செய்யும் வகையில், இந்த வாய்ப்பினை நீதிமன்றம் வழங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
22-ஜூலை-202004:29:12 IST Report Abuse
blocked user இடம்தான் ஆக்கிரமிக்கப்பட்டது என்று உறுதி செய்துவிட்டார்கள். பின்னர் என்ன வழக்கு வேண்டிக்கிடக்கிறது? பொய் சொன்ன தொல்லியல் மட்டைகளை உள்ளே பிடித்து போடுவதை விட்டுவிட்டு நீதிமன்றம் செய்வது காமடி...
Rate this:
Cancel
கண்மணி கன்னியாகுமரி - தமிழ்நாடு,இந்தியா
21-ஜூலை-202011:01:48 IST Report Abuse
கண்மணி கன்னியாகுமரி அத்வானி ஞாபகமறதி நோய் உள்ளவராச்சே? எப்படி வாக்குமூலம் கொடுக்கப்போகிறாரோ...தெரியவில்லை...
Rate this:
Cancel
21-ஜூலை-202008:05:08 IST Report Abuse
ஆரூர் ரங் மூலப்பத்திரமில்லாமல் ஆட்டயபோட்டபட்ட பஞ்சமி நிலங்களை திரும்ப எடுத்துக் கொள்ள பட்டியலினத்தாருக்கு உரிமையுண்டு. அதுபோல அந்நியப் படைகளால் இடிக்கப்பட்ட கோவில்களை எடுத்து திருப்பணி செய்ய இந்துக்களுக்கு உரிமையுண்டு. கடமையுமுண்டு. திரு.ஆட்வாணிஜி செய்த திருப்பணி புண்ணியதுக்கு அவருக்கு நற்கதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X