பொது செய்தி

தமிழ்நாடு

சுழற்சி முறையில் டாக்டர்களுக்கு பணிஅரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; 'கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு கொரோனா கால பணி விலக்கு அளிக்க வேண்டும்' என அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும், மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலர் சாமிநாதன் கூறியதாவது:பொது மக்களுக்கு கொரோனா சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள் தற்போது அதிகம் பாதித்துள்ளனர். நாங்கள் பணி முடிந்து வீட்டிற்கு செல்லும் போது, குடும்பத்தினரும் பாதிக்கின்றனர். இதை தவிர்க்க, பணிபுரியும் மருத்துவமனை அருகிலேயே உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி செய்து தர வேண்டும்.மருத்துவர்களை சுழற்சி முறையில் பிரித்து பணியமர்த்த வேண்டும். கொரோனா வார்டில் நான்கு நாட்கள் பணிபுரிந்தால், ஒரு வாரம் விடுமுறை என அறிவிப்பு உள்ளது. இதனால் பாதிப்பு ஏற்பட்டாலும், ஒரு வார விடுமுறையில், தற்காத்துக் கொள்வதால் இறப்பு தவிர்க்கப்படும்.மருத்துவத்துறையில் அதிகளவு பெண்கள் பணி புரியும் நிலையில், பொது போக்குவரத்து முடக்கம் காரணமாக இரு சக்கர வாகனங்களில் வரும்போது செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள் விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, அவர்கள் வந்து செல்ல வசதியாக வேன், பஸ் போன்ற வாகன வசதியை அந்தந்த மருத்துவமனை நிர்வாகமே ஏற்பாடு செய்துதர வேண்டும்.கர்ப்பிணிகள், தாய்ப்பால் புகட்டும் நிலையிலுள்ள பெண்கள் பாதிக்காமல் இருக்க கொரோனா கால பணி விலக்கு வழங்க அறிவுறுத்தியுள்ள நிலையில், அந்த நடைமுறை செயல்பாட்டில் இல்லை. இதனால் வயிற்றில் உள்ள குழந்தையும், தாய்ப்பால் குடிக்கும் குழந்தையும் பாதிக்கும் நிலை உள்ளது.கொரோனா பாதித்த மருத்துவர்களுக்கு அறிவித்த ரூ.2 லட்சம் நிதியுதவியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X