பொது செய்தி

தமிழ்நாடு

வீடுதோறும் குடிநீர் இணைப்பு திட்டம்: 11 ஊராட்சிகளில் சர்வே நிறைவு

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், அனைத்து வீடுகளுக்கும், 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டத்தில், 11 ஊராட்சிகளில் சர்வே நிறைவடைந்து, திட்டம் தயாரிப்பு துவங்கியது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், 39 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சியிலும், இரண்டு முதல், 9 உட்கிராமங்கள் என, மொத்தம், 97 கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களில், ஊராட்சி, ஒன்றிய நிர்வாகங்கள் மற்றும் சிறப்பு திட்டங்களில், பொதுக்குழாய் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. நீர் இருப்பை பொருத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகளுக்கு, இணைப்பும் வழங்கப்பட்டுள்ளன.தற்போது, அனைவருக்கும் குடிநீர், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, கிராமந்தோறும் நடத்தப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது.வடக்கு ஒன்றிய பி.டி.ஓ., விவேகானந்தன் கூறியதாவது: கணக்கெடுப்பை தொடர்ந்து, வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.இதில், தரைமட்ட, மேல்நிலை தொட்டிகள் கட்ட இடம் தேர்வு பற்றி கருத்துக்கள் கேட்கப்பட்டன; தண்ணீர் தேவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. முதல் கட்டமாக, ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, கொண்டேகவுண்டன்பாளையம், அய்யம்பாளையம், ராசிசெட்டிபாளையம், புரவிபாளையம், வடக்கிபாளையம், தேவம்பாடி, சந்தேகவுண்டன்பாளையம், திம்மங்குத்து ஆகிய, 11 ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, சர்வே பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.இதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. விரைவில் கிராமங்களில் பணிகள் துவங்கப்படும். இரண்டாம் கட்ட கிராம தேர்வு மற்றும் திட்டம் தயாரிப்பு பணிகளும் துவங்கியுள்ளது.இவ்வாறு, பி.டி.ஓ., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X