எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

ஆர்வக் கோளாறா, ஆதிக்கம் செலுத்துகிறாரா? ஆதித்ய தாக்கரேவால் அமைச்சர்கள் திணறல்!

Added : ஜூலை 21, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
aditya thackeray, ஆதித்ய தாக்கரே, அமைச்சர்கள், திணறல்

தனக்கு தொடர்பில்லாத துறைகளின் கூட்டத்தில் கலந்து கொள்வது, அதிகாரிகளுடன் ஆலோசிப்பது என, மஹாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேயின் மகனும், மாநில அமைச்சருமான ஆதித்ய தாக்கரே, 30, சுழன்று வருகிறார். இது, கூட்டணி அமைச்சர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. சிவசேனா இளைஞர் பிரிவின் தலைவரான ஆதித்ய தாக்கரே, 30, மாநில சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு, சுற்றுலா துறைகளின் கேபினெட் அமைச்சராக உள்ளார்.

கடந்த சில மாதங்களாக, தன் அமைச்சரவைக்கு தொடர்பில்லாத கூட்டங்களில் கூட, ஆதித்ய தாக்கரே பங்கேற்று வருகிறார். இதைத் தவிர, மாநிலத்தில் உள்ள அதிகாரிகளையும் நேரில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். வெளிநாடுகளில் தவிக்கும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களை அழைத்து வருவது தொடர்பாக, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோருடன் அவர் பேசினார்.

இவ்வாறு பல்வேறு விஷயங்களில், ஆதித்ய தாக்கரே மூக்கை நுழைப்பது, கூட்டணிக் கட்சி அமைச்சர்கள் மட்டுமல்லாமல், சிவசேனா அமைச்சர்களுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. 'அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் ஆவலில் அவர் இவ்வாறு செய்கிறார்' என, சிவசேனா மூத்த தலைவர்கள் சிலர் சப்பைக் கட்டுகின்றனர். ஆனால், இது தங்களுடைய முக்கியத்துவத்தை குறைப்பதாக, சிவசேனா மற்றும் கூட்டணிக் கட்சி, அமைச்சர்கள் கருதுகின்றனர்.

முதல்வரின் மகன் என்பதால், அதிகாரிகளும் வேறு வழியில்லாமல் சகித்து கொள்வதாகக் கூறப்படுகிறது. தனக்குப் பிறகு ஆதித்யா தான் என்பதை கட்சி மூத்த தலைவர்களுக்கும், மற்றவர்களுக்கும் உணர்த்துவதற்காக, முதல்வர் உத்தவ் தாக்கரே, இதற்கு பச்சைக் கொடி காட்டியுள்ளாரா என்ற சந்தேகமும் அமைச்சர்களிடம் எழுந்துள்ளது. அதனால், எதையும் கூற முடியாமல், அவர்கள் முழிக்கின்றனர்.

ஆட்சி நிர்வாகத்திலும், தன் கட்சி அமைச்சர்களின் துறைகளிலும், தேசியவாத காங்., தலைவர் சரத்பவார் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை, புத்திமதிகளை அளித்து வருகிறார். அதைப் போலவே, ஆதித்ய தாக்கரேயின் தலையீட்டையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில், அமைச்சர்கள் உள்ளனர்.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
21-ஜூலை-202018:09:18 IST Report Abuse
Endrum Indian அடுத்த பப்பு கான் அல்லது சுடலை கான்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
21-ஜூலை-202015:41:38 IST Report Abuse
konanki ஆனா எங்க தமிழ் நாட்டு இளவரசர் மாதிரி ஒருபோதும் மும்பை இளவரசரால் ஊழல் திருட்டு கொள்ள வேலைகளை செய்ய முடியாது.
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
21-ஜூலை-202010:16:59 IST Report Abuse
Indhuindian ஏன் சார் எங்க நைனா முதலமைச்சர் அதனாலே எதிர் கட்சி கூட்டணி கட்சிக்காரங்க என்ன பேசறாங்க என்ன செய்யறாங்கன்னு தெரிஞ்சிக்கவேண்டாமா அதுக்குன்னு ஒரு ஒற்றர் படையாயா வெச்சுக்க முடியும் அதுக்குதான் எங்க நைனா என்ன மந்திரி ஆக்கியிருக்காரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X