பொது செய்தி

தமிழ்நாடு

நடுவீரப்பட்டில் நிகும்பலா யாகம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாள காளி மற்றும் பிரத்தியங்கார தேவி கோவிலில் நேற்று ஆடி மாத அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று மதியம் 12:30 மணிக்கு பிரத்தியங்கராதேவி மண்டபத்தில் கலசம் ஸ்தாபனம் செய்து, யாக வேள்விகள் துவங்கியது. மதியம் 1:30 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. பின்னர், மகா பூர்ணாஹூதி முடிந்து, யாக வேள்வியில் வைத்த கலசம் ஆலய உலாவாக வந்து பிரத்தியங்கரா தேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. மதியம் பாதாள காளிக்கு சிறப்பு அபிேஷகம், மகா தீபாராதனை நடந்தது.விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி அறிவழகன் குருக்கள் செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X