சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் கொலை வழக்கு ௩ போலீசாரிடம் சி.பி.ஐ., விசாரணை

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

மதுரை : சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைதான போலீசாரில், மேலும் மூன்று பேரை, சி.பி.ஐ., காவலில் விசாரிக்க, மதுரை நீதிமன்றம் அனுமதித்து உள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரி ஜெயராஜ், ௬௦; மகன் பெனிக்ஸ், ௩௧, போலீசார் தாக்குதலில் உயிரிழந்தனர். இந்த வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்கிறது.இவ்வழக்கில் கைதான, சாத்தான்குளம் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், போலீசார் முருகன், முத்துராஜ், மதுரை மத்திய சிறையில் உள்ளனர். அவர்களை இரண்டு நாட்கள், சி.பி.ஐ., காவலில் எடுத்து விசாரித்தது.மேலும், 'இவ்வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள போலீஸ்காரர்கள் சாமத்துரை, செல்லதுரை, வெயில் முத்துவை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, மதுரை தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில், நேற்று, சி.பி.ஐ., மனு செய்தது.நீதிபதி ஹேமானந்தகுமார் முன்னிலையில் பகல், 3:00 மணிக்கு மூன்று பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.

'ஜூலை, 23 வரை காவலில் விசாரிக்க அனுமதிக்கப்படுகிறது. அன்று மாலை, 4:30 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களை, மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர்.டாக்டரிடம் கிடுக்கிமுன்னதாக, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோருக்கு, சிகிச்சை அளித்த கோவில்பட்டி அரசு மருத்துவமனையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர். டாக்டர் பாலசுப்பிரமணியம், நர்ஸ்கள் கண்ணகி, புகழ்வாசுகி, மீனா, மகேஷ் ஆகியோரிடம் தனித்தனியே விசாரணை நடத்தப்பட்டது. மாலை, 4:00 மணிக்கு துவங்கிய விசாரணை, இரவு, 7:00 மணிக்கு முடிந்தது. இருவரின் காயத்தன்மை, மருத்துவம் குறித்த ஆவணங்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் சேகரித்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X