பொது செய்தி

தமிழ்நாடு

பேரளையூர் காலனியில் பழுதானமேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; பேரளையூர் காலனியில் இடிந்து விழும் அபாய நிலையிலுள்ள மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.விருத்தாசலம் அடுத்த பேரளையூர் ஊராட்சி, காலனி பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டி, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.நாளடைவில் பராமரிப்பின்றி தொட்டியில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, தண்ணீர் வீணாகிறது . அதன்பின், அமைக்கப்பட்ட மினி டேங்க் மோட்டார் பழுதடைந்து காட்சிப் பொருளானது.இதனால் தண்ணீரின்றி அருகிலுள்ள வயல்வெளிகளுக்கு காலி குடங்களுடன் மக்கள் அலைய வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. பழுதான மேல்நிலை தொட்டி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.எனவே, பழுதான மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்டித் தர வேண்டும். அது வரை மினி டேங்க் மோட்டாரை சீரமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X