பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய கூட்டுப் பண்ணையம் உழவர் உற்பத்தி நிறுவனம் துவக்கம்

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

புவனகிரி; கீரப்பாளையத்தில் விவசாய கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தி நிறுவனத்தை துணை வேளாண் இயக்குனர் திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.புவனகிரி ஒன்றிய துணைச் சேர்மன் வாசுதேவன் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் அமுதா வரவேற்றார். புவனகிரி வேளாண் அலுவலர் ராஜராஜன், முன்னாள் தலைவர் முகுந்தன், உழவர் உற்பத்திக்குழுத் தலைவர் பானுசந்தர், கடலுார் வேளாண் அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை வேளாண் வணிக இயக்குனர் பிரேம்சாந்தி நிறுவனத்தை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் சுனிதா, கனகசபை, ஞானவேல் மற்றும் ஆத்மா திட்ட உறுப்பினர்கள், வேளாண், தோட்டக்கலை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X