சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஞ்., தலைவர் கொலையில் அ.தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம், ஜூலை 21-ஊராட்சி தலைவர் கொலை வழக்கில், அ.தி.மு.க., பிரமுகர் உட்பட, 1௧ பேரை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த, கீழ் அருங்குணத்தை சேர்ந்தவர் சுபாஷ், 30; விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலர். அதே பகுதியை சேர்ந்தவர் தாமோதரன், ௫௫; அ.தி.மு.க., பிரமுகர். இருவரும், கீழ் அருங்குணம் ஊராட்சி தலைவர் பதவிக்கு, தொடர்ந்து போட்டியிட்டனர். கடந்த முறை நடந்த தேர்தலில், சுபாஷ் வெற்றி பெற்று, ஊராட்சி தலைவர் ஆனார்.

இதில், இருவருக்கும் முன்விரோதம் உள்ளது.கடந்த, ௨௦௧௯ ஜனவரியில், சுபாஷ் தரப்பினர், தாமோதரன் ஆதரவாளர் தங்கவேலு, 37, என்பவரை வெட்டிக் கொன்றனர். இது தொடர்பாக, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, சுபாஷ் உட்பட, 15 பேரை கைது செய்தனர். சுபாஷ், ஜாமினில் வந்தார்.நேற்று முன்தினம் மாலை, 6:௦௦ மணியளவில், சுபாஷ், தன் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். தாமோதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள், அங்கு சென்று, சுபாஷை கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் சுபாஷ் இறந்தார்.தாமோதரன் உட்பட, 11 பேர் மீது, நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து, ஒருவரை கைது செய்தனர். அவர் அளித்த தகவல்படி, நேற்று, தாமோதரன் மற்றும், ௨௦ - ௪௨ வயதுடைய, ௧௦ ஆண்களை கைது செய்தனர்.

கொலை நடந்து, 12 மணி நேரத்திற்குள் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பாராட்டினார்.முன்னதாக, 'சுபாஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்ய வேண்டும்.'அதுவரை, உடலை வாங்க மாட்டோம்' என உறவினர்கள் மற்றும் வி.சி., கட்சியினர், கடலுார் அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். ௧௧ பேர் கைது செய்யப்பட்ட பின், உடலை பெற்றுச் சென்றனர். சுபாஷ் உடல் அடக்கத்தில், ௧,௦௦௦த்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடினர். அவரது உடலை, சுபாஷ் வீட்டிற்கு அருகிலேயே உள்ள காலி மனையில் அடக்கம் செய்து, அங்கு மண்டபம் கட்டப் போவதாக கூறினர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.பின், வேறு வழியின்றி, சர்வேயர் மூலம் அந்த இடம் சுபாஷிற்கு சொந்தமானதா என, அளந்து, அங்கு புதைக்க அனுமதித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X