பொது செய்தி

தமிழ்நாடு

ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Added : ஜூலை 21, 2020
Share
Advertisement

பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் சாதனைப் படைத்த மாணவர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது.பு.முட்லுார் ஜவகர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 பொதுத் தேர்வில், தேர்வு எழுதிய 59 மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி 100 சதவீதமாகும். பள்ளி அளவில், மாணவர் பாலசந்தோஷ் 534 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், மாணவி பிரியதர்ஷினி 532 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், மாணவி பிரியங்கா 519 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். கணிப்பொறியியல் பாடத்தில், மாணவர்கள் கோவிந்தன், நிம்ரா, விஷ்ணுபிரியா ஆகியோர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில், பள்ளி தாளாளர் டாக்டர் பிரியங்கா, முதல்வர் சுமதி மதியழகன் ஆகியோர் மாணவர்களை பாராட்டி, பரிசு வழங்கினர்.விழாவில், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X